Breaking News

இலங்கையில் பள்ளி மாணவியை சினிமா பாணியில் கடத்திச் சென்ற கும்பல்... பரபரப்பு சிசிடிவி காட்சி

அட்மின் மீடியா
0

இலங்கையின் கண்டி மாவட்டத்தில் மாணவி ஒருவர் பள்ளிக்கு செல்லும் போது கருப்பு மினி வேனில் கடத்தி செல்லும் காட்சிகாப்பாற்ற வந்த இளைஞரை இழுத்து அரை கிலோமீட்டர் தூரம் சென்று கீழே தள்ளிவிட்ட கும்பல்கடத்தலில் ஈடுபட்டகண்டுபிடிப்பதற்காக மூன்று தனிப்படைகள் அமைத்து தேடி வருகின்றனர்

இலங்கையில் பள்ளியில் இருந்து சாலையில் நடந்து சென்ற மாணவியை, வேனில் வந்த மர்ம நபர்கள் கடத்திச் சென்ற, சிசிடிவி காட்சிகள் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.



இலங்கையின் கண்டி மாவட்டம் அம்பரப்பொல பகுதியில், சாலையில் நடந்து சென்ற இரண்டு பள்ளி மாணவிகளில் ஒருவரை, காரில் சென்ற கும்பல் கடத்தியது. இதனைப் பார்த்த ஒருவர் ஓடிச் சென்று அந்நபரை இருக்கிப் பிடித்தார். இருந்தபோதிலும் அந்த கார் வேகமாக சென்றது. இதுகுறித்து மாணவியின் உறவினர்கள் புகார் அளித்த நிலையில், போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவம் குறித்த பதறவைக்கும் சிசிடிவி காட்சி தற்போது வெளியாகியுள்ளது.

இதுகுறித்து மாணவியின் உறவினர்கள் புகார் அளித்த நிலையில், போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். 

இதனைத் தொடர்ந்து கடத்தலுடன் தொடர்புடைய வேன் பொலன்னறுவை நகரில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

மேலும், குறித்த வாகனம் வாடகைக்கு பெற்றுக்கொள்ளப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகின்றது.சிறுமியின் தந்தை வழி உறவினர் ஒருவரே குறித்த சிறுமியைக் கடத்தியுள்ளதாக தெரிய வந்துள்ளது.குறித்த இருவருக்கும் திருமணம் செய்து வைப்பதற்கு முன்னதாக இணக்கம் தெரிவித்ததாகவும், பின்னர் சிறுமியின் தந்தை எதிர்ப்பு தெரிவித்த நிலையில் இந்த கடத்தல் சம்பவம் நடத்தப்பட்டதாகவும் ஆரம்பக்கட்ட விசாரணைகளில் தெரிய வந்துள்ளது.

மாணவியையும், கடத்தலில் ஈடுபட்ட நபரையும் விரைந்து கண்டுபிடிப்பதற்காக மூன்று தனிப்படைகள் அமைத்து தேடி வருகின்றனர்.இதற்கிடையே, பள்ளி மாணவியை ஆட்கள் நடமாட்டமுள்ள சாலையில் வேனில் கடத்திச் செல்லப்படும் வீடியோ காட்சிகள் இணையத்தில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

வீடியோ பார்க்க இங்கு கிளிக் செய்யவும்:-

https://x.com/adminmedia1/status/1878623923925123273

Tags: வெளிநாட்டு செய்திகள் வைரல் வீடியோ

Give Us Your Feedback