தெலங்கானாவில் மனைவியை கொன்று துண்டு துண்டாக வெட்டி குக்கரில் வேகவைத்து ஏரியில் வீசிய முன்னாள் ராணுவ வீரர் கைது
தெலங்கானாவில் மனைவியை கொன்று உடல்பாகங்களை குக்கரில் வேகவைத்து ஏரியில் வீசிய முன்னாள் ராணுவ வீரர் கைது
தெலுங்கானா மாநிலத்தில் ஹைதராபாத்தில் ஜனவரி 18ம் தேதி புட்டவெங்கடா மாதவி என்ற 35 வயது பெண் மாயமானதாக அந்த பெண்ணின் பெற்றோர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தனர்.
இதுதொடர்பான புகாரில் காவல் துறையினர் நடத்திய விசாரணையில், அவருடைய கணவரான ஓய்வு பெற்ற ராணுவ வீரர் குருமூர்த்தியிடம் தீவிர விசாரணை நடத்தினர்.தகராறு காரணமாக தன்னுடைய மனைவியை கொலை செய்ததை ஒப்புக்கொண்டார். சண்டையின் போது மாதவியை கொன்ற குருமூர்த்தி, அவரது உடல்பாகங்களை துண்டு துண்டாக வெட்டி, அதனை குக்கரில் வேகவைத்து குளத்தில் வீசியது தெரியவந்தது.
இவர்களுக்கு கடந்த 13 வருடங்களுக்கு முன்பாக திருமணம் நடந்த நிலையில் 2 குழந்தைகள் உள்ளனர். இதன் அடிப்படையில் போலீசார் குருமூர்த்தியை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.
Tags: இந்திய செய்திகள்