Breaking News

அதிசயம் ஆனால் உண்மை இறுதி அஞ்சலிக்காக ஆம்புலன்ஸில் எடுத்து செல்லப்பட்ட உடல் - ஸ்பீடு பிரேக்கரில் ஏறி இறங்கியதும் உயிர் பிழைத்த நபர் முழு விவரம்

அட்மின் மீடியா
0

அதிசயம் ஆனால் உண்மை இறுதி அஞ்சலிக்காக ஆம்புலன்ஸில் எடுத்து செல்லப்பட்ட உடல் - ஸ்பீடு பிரேக்கரில் ஏறி இறங்கியதும் உயிர் பிழைத்த நபர் முழு விவரம்



மகாராஷ்டிராவில் இறந்துவிட்டதாக அறிவிக்கப்பட்ட ஒருவர் ஆம்புலன்ஸில் திடீரென உயிர் பிழைத்த சம்பவம் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. 

இறுதி அஞ்சலி செலுத்துவதற்காக ஏற்பாடு செய்யப்பட்ட ஆம்புலன்ஸில் உடலை கொண்டு சென்றனர்.அப்பொழுது ஆம்புலன்ஸ் வேகத்தடை மீது ஏறி இறங்கிய பொழுது திடீரென அவரின் கைவிரல் அசைந்துள்ளது. 

இதையடுத்து உடனடியாக மருத்துவ பணியாளர்களிடம் கூறி ஆம்புலன்ஸ் வேறு ஒரு மருத்துவமனை அழைத்து சென்று கணவரை காப்பாற்றினார். இந்த சம்பவம் இணையத்தில் கவனம் பெற்றுள்ளது.

மகாராஷ்டிர மாநிலத்தின் கோலாப்பூர் மாவட்டத்தில் கசாபா-பவடா பகுதியைச் சேர்ந்தவர்  பாண்டுரங் உல்பே (65). என்ற நபருக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டு தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளனர். ஆனால் சிகிச்சை பலனின்றி இறந்துள்ளார்.  மருத்துவமனையில் இருந்து உடலை அடக்கம் செய்ய வீட்டிற்க்கு செல்ல அங்கிருந்து புறப்பட்டு உள்ளனர்.

மேலும் தங்களுடைய உறவினர்கள் அனைவருக்கும் உல்பே இறந்துவிட்டார் என்ற செய்தியையும் அவர்கள் தெரிவித்து இறுதிச் சடங்கிற்கான ஏற்பாடுகளையும் செய்தனர்

மருத்துவமனையில் இருந்து ஆம்புலன்ஸ் மூலம் இறந்த உடலை வீட்டிற்கிற்கு எடுத்து சென்றுள்ளனர்.அப்போது  செல்லும் வழியில் திடீரென ஸ்பீட் பிரேக்கரில் வேகமாக ஏறி இறங்கிய ஆம்புலன் குலுங்கி இருக்கிறது. அப்போது, அவரது கை லேசாக அசைந்துள்ளதை வாகனத்தில் இருந்த அவரது மனைவி மற்றும் குடும்பத்தினர்  உடனடியாக வாகனத்தை திருப்பி உல்பேவை வேறொரு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு 2 வாரம் வரை மருத்துவமனையில் அவர் தங்க வைக்கப்பட்டார். ஆஞ்சியோபிளாஸ்டி சிகிச்சை மேற்கொள்ளப்பட்டதில் அவர் குணமடைந்து உடல்நலம் தேறியுள்ளார்.

அட்மின் மீடியா செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள 

Follow as on google news             :- CLICK HERE 

follow us on twitter                       :- CLICK HERE 

Follow us on Facebook                 :- CLICK HERE 

Follow us on telegram                  :- CLICK HERE 

Follow us on whatsapp channel   :- CLICK HERE 

Follow as on Instagram                :- CLICK HERE 

download our app play store        :- CLICK HERE

Tags: இந்திய செய்திகள்

Give Us Your Feedback