இரு பேருந்துகளுக்கு இடையே சிக்கிக் கொண்ட இளைஞர்! அதிர்ச்சி வீடியோ...
அதிர்ச்சி... இரு பேருந்துகளுக்கு இடையே சிக்கிக் கொண்ட இளைஞர்!
தஞ்சாவூர் மாவட்டம், பட்டுக்கோட்டை அருகே தாமரங்கோட்டை பகுதியில் முத்துப்பேட்டையில் இருந்து பட்டுக்கோட்டை நோக்கி தனியார் பேருந்து ஒன்று சென்று கொண்டிருந்தது.
இதற்குப் பின்னாலேயே அரசுப் பேருந்து ஒன்று வேகமாக வந்து கொண்டிருந்தது. இரண்டு பேருந்துகளும் ஒன்றன் பின் ஒன்றாக வந்து கொண்டிருந்த போது, தாமரங்கோட்டை அருகே பரத் என்ற இளைஞர் ஒருவர் தனியார் பேருந்தில் ஏறுவதற்காக கையை காட்டி சாலையைக் கடக்கச் சென்றார்.
அப்போது பின்னால் வந்து கொண்டிருந்த அரசுப் பேருந்து ஓட்டுநர் தனியார் பேருந்தை முந்துவதற்கு முயற்சி செய்துள்ளார். இதில் தனியார் பேருந்தில் ஏற முயற்சித்த இளைஞர் பரத் இரண்டு பேருந்துகளுக்கு இடையே சிக்கிக் கொண்டு அதிர்ஷ்டவசமாக லேசான காயங்களுடன் உயிர் தப்பியுள்ளார்இரு பேருந்துகளுக்கும் இடையே சிக்கி நூலிழையில் உயிர் தப்பும் விபத்து பதிவான பதைபதைப்பூட்டும் சிசிடிவி காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
வீடியோ பார்க்க இங்கு கிளிக் செய்யவும்:-
https://x.com/adminmedia1/status/1875082758122528970
Tags: வைரல் வீடியோ