Breaking News

உடல் இச்சை வந்தால் தாய், மகள், சகோதரியுடன் உறவு வைத்துக் கொள்ளலாம் என பெரியார் கூறியதாக சீமான் சர்ச்சை பேச்சு முழு விவரம்

அட்மின் மீடியா
0

உடல் இச்சை வந்தால் தாய், மகள், சகோதரியுடன் உறவு வைத்துக் கொள்ளலாம் என பெரியார் கூறியதாக சீமான் பேசியதால் சர்ச்சை

கடலூர் மாவட்டத்தில் நாம் தமிழர் கட்சியின் கலந்தாய்வுக் கூட்டம் நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களை சீமான் சந்தித்தார். அப்போது பேசிய நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், 

தமிழை சனியன் என்று சொன்ன பெரியார் எந்த மொழியில் எழுதினார். என் மொழியை ஒன்றுமில்லை என்று சொல்லும்போது, பிறகு என்ன சமூக மாற்றம், சீர்திருத்தம், அரசியல் இருக்கிறது. ஆகச் சிறந்த உலக வாழ்வியல் நெறி திருக்குறளை மலம் என்று சொல்லிவிட்டீர்கள்.

அவரைக் கொண்டு வந்து கொள்கை வழிகாட்டி என்றால், எந்த இடத்தில் கொள்கை வழிகாட்டி. பெண்ணிய உரிமையா? உனக்கு உடல் இச்சை வந்தால், பெற்ற தாயோ, மகளோ, அக்காவோ, தங்கையோ அவர்களுடன் உடலுறவு வைத்துக்கொண்டு மகிழ்ச்சியாக இரு என சொன்னது பெண்ணிய உரிமையா?

தன் தோட்டத்தில் இருந்த 1000 தென்னை மரங்களை வெட்டினார். அவர் பகுத்தறிவாளர் தானே, என் தோட்டத்தில் கள்ளு இறக்க அனுமதி இல்லை என்று சொல்லியிருந்தால் போதுமே எதற்கு மரங்களை வெட்ட வேண்டும். இது பகுத்தறிவா?

உலகில் எந்த நாட்டில் மது இல்லை. அனைவரும் மது அருந்துகிறார்கள். மது குடிக்க வேண்டாம் என்பது, கட்டிய மனைவியுடன் படுக்க வேண்டாம் என்று சொல்வதற்கு சமம் என்று சொல்லியிருக்கிறாரா? இல்லையா? அப்போ இந்த இடத்தில் ஏற்கிறீர்களா

சமூகநீதிக்கும் பெரியாருக்கும் சம்பந்தம் இருக்கிறதா அல்லது இடஒதுக்கீட்டிற்கும் ஆணமுத்துக்கும் சம்பந்தம் இருக்கிறதா? போராடி பெற்றுக்கொடுத்தது ஆணமுத்தா, பெரியாரா? என பேசி சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளார்

உண்மை என்ன:-

உனக்கு உடல் இச்சை வந்தால், பெற்ற தாயோ, மகளோ, அக்காவோ, தங்கையோ அவர்களுடன் உடலுறவு வைத்துக்கொண்டு மகிழ்ச்சியாக இரு என பெரியார் கூறவில்லை 

இந்த செய்தி பல ஆண்டுகளாக பரவும் பொய்யான செய்தி ஆகும். பலரும் ஆதாரமாகக் கூறப்படும் 11.05.1953 விடுதலை நாளேட்டில் அப்படியொரு செய்தி வெளியாகவில்லை என்பதுதான் உண்மை

தபெதிக தலைவர் கு.ராமகிருட்டிணன்

பெரியார் பாலியல் இச்சையை பெற்ற அம்மா, சொந்த தங்கையுடன் தீர்த்துக் கொள்ளலாம் என்று சொன்னதாக சீமான் இன்று செய்தியாளர் சந்திப்பில் கூறியுள்ளார். நாளை (09.01.25) காலை 10 மணிக்கு சீமான் வீட்டிற்கு நேராக நான் செல்கிறேன். சீமான் சொன்னதிற்கான ஆதாரத்தை நாளை சீமான் என்னிடம் தர வேண்டும்.-கு.ராமகிருட்டிணன் (தபெதிக தலைவர்)

Tags: அரசியல் செய்திகள்

Give Us Your Feedback