இந்து பெண்கள் அரபு நாட்டிற்குக் கடத்தப்பட்டு விற்கிறார்கள் என பரவும் வீடியோ உண்மை என்ன FACT CHECK
அட்மின் மீடியா
0
What is the truth of the viral video of Hindu womens being trafficked and sold to Arab countries?
இந்து பெண்கள் அரபு நாட்டிற்குக் கடத்தப்பட்டு விற்கிறார்கள் என பரவும் வீடியோ உண்மை என்ன FACT CHECK
பரவும் செய்தி:-
டெல்லியில், வெளிநாட்டு வேலை அழைப்பு மையத்தில் வேலை வாய்ப்பு என்ற பெயரில், ஒரு குறிப்பிட்ட சமூகத்தைச் சேர்ந்தவர்கள் தாங்களாகவே வேலை ஆலோசனை நிறுவனத்தை நடத்துகிறார்கள், அதில் இந்து பெண்கள் மற்றும் பெண்களை மட்டுமே வேலை என்று கூறி அவர்களை எல்லாம் விற்கிறார்கள். அரபு நாடுகளுக்கு. தற்போது இந்து சமுதாய பெண்கள் மேற்கத்திய கலாச்சார போதையில் உள்ளனர், அதன் காரணமாக இன்று டெல்லியில் ஒரு நாகரீக இளைஞன் எப்படியோ 3 சிறுமிகளை டெல்லியிலேயே ஒரு வீட்டில் இருந்து மீட்டான், அனைவரும் என்ன நிலையில் இருக்கிறார்கள் என்று பாருங்கள்.
இந்த வீடியோவை உங்கள் அனைத்து தொடர்பு எண்கள் மற்றும் குழுக்களுக்கு அனுப்பவும், ஆம், மேற்கத்திய கலாச்சாரத்தின் மீது பைத்தியம் பிடிக்கும் அனைத்து பெண்களுடனும் பகிர்ந்து கொள்ளுங்கள்
உண்மை என்ன:-
பலரும் ஷேர் செய்யும் அந்த வீடியோவில் நடந்த சம்பவம் உண்மையான வீடியோ இல்லை
அந்த வீடியோ எச்சரிக்கையாக இருக்கவேண்டும் என ஓர் சித்தரிக்கப்பட்ட வீடியோ ஆகும்,
பலரும் அந்த வீடியோவை பார்த்து பதறி பலருக்கும் ஷேர் செய்கின்றார்கள், ஆனால் அந்த வீடியோவை சற்று பதட்டபடாமல் பார்த்தால் அந்த வீடியோ ஆரம்பத்தில் 4 விநாடிகளில் இது ஓர் சித்தரிக்கப்பட்ட வீடியோ என தெளிவாக காண்பிக்கப்படுகின்றது
பலரும் ஷேர் செய்யப்படும் அந்த வீடியோ கடந்த 2023, பிப்ரவரி 12ம் தேதி Naveen Jangra என்ற யூடியூப் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்கள்
மேலும் அந்த யூடியூப் பக்கத்தில் அதுபோல் பல வீடியோக்கள் உள்ளது ,எனவே பொய்யான செய்தியினை யாரும் நம்பாதீர்கள்
அட்மின் மீடியா ஆதாரம் பார்க்க இங்கு கிளிக் செய்யவும்:-
https://www.youtube.com/watch?v=gkcMa3negiU
அட்மின் மீடியா ஆதாரம் பார்க்க இங்கு கிளிக் செய்யவும்:-
https://www.youtube.com/@NaveenJangra
Tags: FACT CHECK மறுப்பு செய்தி