கீழடி அருங்காட்சியகம் ஆன்லைனில் சுற்றிபார்க்கலாம் முழு தகவல்கள் keeladi museum virtual tour
அட்மின் மீடியா
0
கீழடி அருங்காட்சியகம் ஆன்லைனில் சுற்றிபார்க்கலாம் முழு தகவல்கள் keeladi museum virtual tour
கீழடி அருங்காட்சியகத்தை இணையவழி மூலமாக சுற்றிப் பார்க்கும் வகையில் மெய்நிகர் சுற்றுலா உருவாக்கப்பட்டுள்ளது
கீழடி அருங்காட்சியகம் ஆன்லைனில் சுற்றிபார்க்க இங்கு கிளிக் செய்யவும்:-
https://keeladimuseum.tn.gov.in
சிவகங்கை மாவட்டம் கீழடியில் தொல்லியல் துறையினர் அகழாய்வுகளை மேற்கொண்டு, பல பெருமை வாய்ந்த் தொல்லியல் கட்டமைப்புகள் மற்றும் பொருள்களைக் கண்டறிந்துள்ளனர்.
இவற்றை மக்கள் இருக்கும் இடத்திலிருந்தே காணும் வகையில், கீழடி இணையதளம் உருவாக்கப்பட்டுள்ளது.
ஆன்லைன் மூலம் காண மெய்நிகர் சுற்றுலாவை உருவாக்கி கீழடி இணையதளத்தில் இணைக்கப்பட்டுள்ளது. இந்த இணையதளத்தை மக்கள் பாரக்கும் வகையில், தமிழக முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.
கீழடி ஆவணப்படம் மற்றும் கீழடி அருங்காட்சியகம் குறித்தான அனைத்து விவரங்களையும், இங்குக் கண்டெடுக்கப்பட்ட தொல்லியல் பெருமைவாய்ந்த பொருள்களையும் இந்த இணையதளத்தில் கண்டு மகிழலாம்.
வைகை நதிக்கரையில் சங்ககால நகர நாகரிகம் என்ற அறிமுகத்துடன் இந்த இணையதளத்தை பார்வையிடலாம். இங்கு கீழடியின் செயலி, அது தொடர்பாக வெளியிடப்பட்ட அறிக்கைகள், அகழாய்வுகள் பற்றிய தகவல்களை மக்கள் அறிந்துகொள்ளலாம்.
Tags: தமிழக செய்திகள்