kuwait dead 2 tamil குவைத் நாட்டில் குளிருக்காக அறையில் தீ மூட்டிவிட்டு தூங்கியதில் மூச்சுத் திணறி 2 தமிழர்கள் உட்பட 3 பேர் உயிரிழப்பு நடந்தது என்ன முழு விபரம்
குவைத் நாட்டில் குளிருக்காக அறையில் தீ மூட்டிவிட்டு தூங்கியதில் மூச்சுத் திணறி 2 தமிழர்கள் உட்பட 3 பேர் உயிரிழப்பு நடந்தது என்ன முழு விபரம் kuwait dead 2 tamil
குவைத்தில் மூச்சுத் திணறி 2 தமிழர்கள் உட்பட 3 இந்தியர்கள் உயிரிழந்தனர். ஒரு தமிழர் ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
கடலூர் மாவட்டம் மங்கலம்பேட்டையைச் சேர்ந்த முகமது யாசின், திருவண்ணாமலையைச் சேர்ந்த முகமது ஜுனைத், கவுஸ் பாட்ஷா மற்றும் உத்திரபிரதேசத்தை சேர்ந்த ஒருவரும் குவைத்தில் டிரைவராகப் பணிபுரிந்து வருகின்றனர்
அவர்களுக்கு உரிமையாளர்கள் அளித்த அறையிலேயே தங்கி வந்துள்ளனர். குவைத்தில் இப்போது மிகக் கடுமையான குளிர் நிலவுகிறது. சிலநேரங்களில் 5, 6 டிகிரி வரை கூட வெப்பம் குறையும்.
கடும் குளிர் காரணமாக, தங்களது அறைக்குள் தீ மூட்டியதாக கூறப்படுகிறது. தீயை மூட்டியவர்கள் தூங்கியதால் அறை முழுவதும் புகை பரவி அறையில் இருந்த ஆக்சிஜன் குறையத் தொடங்கியுள்ளது. குளிர் காரணமாகக் கதவு, ஜன்னல் என அனைத்தும் மூடப்பட்டு இருந்ததால் வெளிக்காற்றும் உள்ளே வரவில்லை உறக்கத்தில் இருந்ததால் எழுந்து வெளியே செல்ல முடியவில்லை. அடுத்த சில வினாடிகளில் மிகவும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். பின்னர் உறக்கத்திலேயே உயிரிழந்துள்ளனர். காலை அறைக்கு வந்த நண்பர்கள் சம்பவத்தை கண்டு பெரும் அதிர்ச்சி அடைந்தனர். இதுபற்றி குடும்பத்தினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முதற்கட்ட விசாரணையில், அறைக்குள் இருந்த புகையால் உருவாகும் கார்பன் மோனாக்சைடை சுவாசித்ததே மரணத்திற்க்கு காரணம் என தெரியவந்துள்ளது.
இதில், மங்கலம்பேட்டையைச் சேர்ந்த முகமது யாசின், முகமது ஜுனைத் மற்றும் உ.பி. இளைஞர் உயிரிழந்துள்ளார். திருவண்ணாமலை கவுஸ் பாட்ஷா ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். உயிரிழந்தவர்களின் உடல்கள் குவைத்தில் தகனம் செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அறைக்குள் தீமூட்டினால் ஆக்சிஜன் முற்றிலும் இல்லாமல் போய் விடும் என்ற விழிப்புணர்வு இல்லாத காரணத்தால் விபரீதம் நிகழ்ந்துள்ளது.
Tags: வெளிநாட்டு செய்திகள்