Breaking News

சவுதி அரேபியாவில் கொட்டித்தீர்த்த கனமழை வெள்ளத்தில் மிதக்கும் மெக்கா மதினா நகரங்கள் அதிர்ச்சி வீடியோ mecca floods 2025

அட்மின் மீடியா
0

சவுதி அரேபியாவில் கொட்டித்தீர்த்த கனமழை வெள்ளத்தில் மிதக்கும் மெக்கா மதினா நகரங்கள் அதிர்ச்சி வீடியோ mecca floods 2025



சவூதி அரேபியாவில் மெக்கா உள்பட முக்கிய நகரங்களில் பகுதிகளின் இடியுடன் கூடிய பலத்த மழை மற்றும் ஆலங்கட்டி பெய்தது. இதனால் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.மெக்கா மற்றும் ஜெட்டாவில் சாலைகளில் தண்ணீர் வெள்ளம் போல் பெருக்கெடுத்து ஓடுகிறது. 

மேலும், மோசமான வானிலை காரணமாக விமான சேவை, ரயில் சேவை பாதிக்கப்பட்டது.

பாலைவனப்பகுதியான சவுதியில் கடும் வெப்பம் நிலவும் நிலையில், திடீரென மழை பெய்தது குறிப்பிடத்தக்கது. இதனால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்புக்கு உள்ளாகியுள்ளது..விமான நிலையம், ஹாஸ்பிட்டல்களும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. இந்த மழை வெள்ளத்தில், பைக்கில் சென்ற டெலிவரி மேன் ஒருவர் பைக்குடன் வெள்ளத்தில் சிக்கியதும், அவர் மீட்கப்படும் வீடியோ காட்சி வெளியாகியுள்ளது. 

மேலும்  அடுத்த 3 நாட்களுக்கு அங்கு கனமழை தொடரும் என அந்நாட்டு வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதனால், பாதுகாப்பு முன்னெச்சரிக்கையாக இருக்குமாறு பொதுமக்களுக்கு அந்நாட்டு அரசு அறிவுறுத்தியது.

கனமழை காரணமாக பல பகுதிகளில் வெள்ளம் போன்ற சூழல் உருவாகி முக்கிய சாலைகள் தடைபட்டுள்ளது. கார்கள் முழுவதுமாக வெள்ள நீரில் மூழ்கியது மற்றும் பலர் அடித்துச் செல்லப்பட்டதைக் காட்டும் அதிர்ச்சியூட்டும் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

இந்த வானிலை இன்றும் (செவ்வாய்க்கிழமை) நீடிக்கும் என்பதால், நாட்டின் தேசிய வானிலை ஆய்வு மையம் (NCM) வரை பல பகுதிகளில் சிவப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது. 

முன்னதாக, மக்கா பிராந்தியத்தில் உள்ள அதிகாரிகள் வெளியிட்ட அறிக்கையில், வானிலை நிலை காரணமாக, சில விமான தாமதங்கள் ஏற்படலாம். விமான அட்டவணை குறித்த அறிவிப்புகளுக்கு விமான நிறுவனங்களைத் தொடர்பு கொள்ளவும் என அறிவித்திருந்தனர்.

வீடியோ பார்க்க இங்கு கிளிக் செய்யவும்:-

https://x.com/adminmedia1/status/1876605405218165183

வீடியோ பார்க்க இங்கு கிளிக் செய்யவும்:-

https://x.com/adminmedia1/status/1876607220907159753

வீடியோ பார்க்க இங்கு கிளிக் செய்யவும்:-

https://x.com/adminmedia1/status/1876606781759324251

வீடியோ பார்க்க இங்கு கிளிக் செய்யவும்:-

https://x.com/nanana365media/status/1876288228250309117

வீடியோ பார்க்க இங்கு கிளிக் செய்யவும்:-

https://x.com/ItsKhan_Saba/status/1876596296439787802

அட்மின் மீடியா செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள 

Follow as on google news             :- CLICK HERE 

follow us on twitter                       :- CLICK HERE 

Follow us on Facebook                 :- CLICK HERE 

Follow us on telegram                  :- CLICK HERE 

Follow us on whatsapp channel   :- CLICK HERE 

Follow as on Instagram                :- CLICK HERE 

download our app play store        :- CLICK HERE

Tags: வெளிநாட்டு செய்திகள் வைரல் வீடியோ

Give Us Your Feedback