Breaking News

தமிழகத்தில் வேகமாக பரவும் ’ஸ்க்ரப்டைபஸ்’ வைரஸ்- பொது சுகாதாரத்துறை எச்சரிக்கை Scrub Typhus

அட்மின் மீடியா
0

தமிழகத்தில் ஸ்கரப் டைபஸ் (Scrub Typhus) என்ற பாக்டீரியா தொற்று அதிகரித்து வருகிறது என பொது சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது


ரிக்கட்ஸியா என்ற பாக்டீரியா பாதித்த ஒட்டுண்ணிகள், பூச்சிகள் கடிப்பதால் ஸ்கரப் டைபஸ் ஏற்படும் 

காய்ச்சல், தலைவலி, உடல் சோர்வு, தடிப்புகள் ‘ஸ்கரப் டைபஸ்' நோயின் முக்கிய அறிகுறிகள் 

சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், திருப்பத்தூர், செங்கல்பட்டில் நோயின் தாக்கம் அதிகம் உள்ளது 

தமிழகத்தில் கிழக்கு மற்றும் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளிலும் ‘ஸ்கரப் டைபஸ்’ நோய் தாக்கம் 

விவசாயிகள், வனப்பகுதியில் வசிப்போர், புதர் மண்டிய பகுதியில் இருப்போர் நோயால் பாதிக்கப்படலாம் நோய்க்கு மருத்துவர் பரிந்துரைப்படி அசித்ரோமைசின், டாக்ஸிசைக்கிள் மருந்து தரப்படுகிறது - என பொது சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது

இது குறித்து, பொது சுகாதாரத் துறை இயக்குனர் செல்வவிநாயகம், மாவட்ட அதிகாரிகளுக்கு அனுப்பியுள்ள சுற்றறிக்கை:-

ரிக்கட்ஸியா' எனப்படும் பாக்டீரியா பாதித்த ஒட்டுண்ணிகள், பூச்சிகள், உயிரினங்கள் மனிதர்களை கடிக்கும்போது, அவர்களுக்கு 'ஸ்க்ரப் டைபஸ்' நோய் ஏற்படுகிறது. காய்ச்சல், தலைவலி, உடல் சோர்வு மற்றும் தடிப்புகள், முக்கிய அறிகுறிகளாக கருதப்படுகின்றன.

தமிழகத்தில், சென்னை, காஞ்சிபுரம், திருப்பத்துார், திருவள்ளூர், செங்கல்பட்டு, ராணிப்பேட்டை, வேலுார் மாவட்டங்களில், அதிக அளவில், 'ஸ்க்ரப் டைபஸ்' பரவல் உள்ளது. அதேபோல், கிழக்கு தொடர்ச்சி, மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகளில், இத்தகைய பாதிப்பு காணப்படுகிறது.

விவசாயிகள், புதர் மண்டிய மற்றும் வனப்பகுதிகளுக்கு அருகே வசிப்போர், மலையேற்றத்தில் ஈடுபடுவோர், கர்ப்பிணியர், பூச்சி கடிக்கு உள்ளாகும் சூழலில் இருப்போருக்கு, பாதிப்புகள் ஏற்பட வாய்ப்புகள் அதிகம். 

'எலிசா' ரத்தப் பரிசோதனை மற்றும் மூலக்கூறு பரிசோதனைகள் வாயிலாக, நோயை கண்டறியலாம்.'ஸ்க்ரப் டைபஸ்' காய்ச்சலுக்கு உள்ளானவர்களுக்கு, 'அசித்ரோமைசின், டாக்ஸிசைக்ளின்' போன்ற ஆன்ட்டி பயாடிக் மருந்துகள் அளித்து, சிகிச்சை அளிக்க வேண்டும். உடல் நிலையில் முன்னேற்றம் ஏற்படாவிட்டால், இதயம், நுரையீரல், சிறுநீரகம் சார்ந்து பாதிப்புகள் ஏற்பட்டால், ரத்த நாளத்தின் வழியே, திரவ மருந்துகளை செலுத்தி, உயர் சிகிச்சை அளிக்க வேண்டும்.

தேவைப்பட்டால் உயர் சிகிச்சை மையங்களில், நோயாளிகளை அனுமதிக்க வேண்டும். இந்த வழிகாட்டுதலின் கீழ், 'ஸ்க்ரப் டைபஸ்' பாதிப்புகளுக்கு, சிகிச்சை அளிப்பதை மாவட்ட சுகாதாரத் துறை அதிகாரிகள் உறுதி செய்ய வேண்டும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Tags: தமிழக செய்திகள்

Give Us Your Feedback