டேட்டா இல்லாமல் வாய்ஸ் கால் மற்றும் SMS புதிய ரீசார்ஜ் திட்டம் அறிமுகம் செய்த ஏர்டெல் மற்றும் ஜியோ முழு விவரம் jio and Airtel Introduces New Voice and SMS-Only Prepaid Plans
டேட்டா இல்லாமல் வாய்ஸ் கால் மற்றும் SMS புதிய ரீசார்ஜ் திட்டம் அறிமுகம் செய்த ஏர்டெல் மற்றும் ஜியோ முழு விவரம் jio and Airtel Introduces New Voice and SMS-Only Prepaid Plans
வாய்ஸ் கால் மற்றும் SMS சேவைக்கு தனித்தனியே ரீசார்ஜ் செய்யும் திட்டங்களை அறிமுகப்படுத்தியது ஜியோ மற்றும் ஏர்டெல் நிறுவனங்கள்.
பயனர்களுக்கு வாய்ஸ் கால் மற்றும் SMS சேவைக்கு தனித்தனியான ரீசார்ஜ் செய்யும் முறையை அறிமுகப்படுத்த டிராய் உத்தரவிட்டு இருந்தது
தொலைத்தொடர்பு நிறுவனங்கள் டேட்டாவுடன் கூடிய ரீசார்ஜ் திட்டங்களையே பயன்பாட்டில் வைத்திருந்தன. இதனால் ஆண்ட்ராய்டு இல்லாத சாதாரண மொபைல்போன் வைத்திருப்பவர்களும் வாய்ஸ் கால் மட்டும் தேவைப்படுவோரும் டேட்டாவுடன் ரீசார்ஜ் செய்வதால் சிரமத்திற்கு ஆளாகினர்.
இதையடுத்து இந்திய தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் (டிராய்) டெலிகாம் நிறுவனங்களின் ரீசார்ஜ் திட்டங்களில் வாய்ஸ் கால்களுக்கு(போன் அழைப்பு) மட்டும் திட்டங்களை மீண்டும் அறிமுகப்படுத்த உத்தரவிட்டிருந்தது.
அதன்படி ஜியோ & ஏர்டெல் நிறுவனங்கள், Data இன்றி Voice Call & SMS வசதிக்கு மட்டுமான புதிய ரீசார்ஜ் திட்டங்களை அறிவித்துள்ளன.
ஜியோவில் ரூ. 458க்கு 84 நாட்களுக்கு Unlimited Voice Call & 1,000 SMS வழங்கப்படுகிறது.
ஏர்டெல்லில் ரூ.509க்கு 84 நாள்கள் Unlimited Voice Call & 900 SMS வழங்கப்படுகிறது
ஜியோ திட்டங்கள்:-
ரூ. 458 -க்கு ரீசார்ஜ் செய்தால் 84 நாட்களுக்கு அன்லிமிடெட் வாய்ஸ் கால் மற்றும் 1,000 எஸ்எம்எஸ் வழங்கப்படுகிறது.
ரூ. 1,958 -க்கு 365 நாள்களுக்கு அன்லிமிடெட் வாய்ஸ் கால், 3,600 எஸ்எம்எஸ் உள்ளடக்கிய திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
கூடுதல் சந்தா நன்மை
ஜியோடிவி, ஜியோசினிமா (பிரீமியம் அல்லாதது) மற்றும் ஜியோ கிளவுட் போன்ற ஜியோ பயன்பாடு
ஏர்டெல் திட்டங்கள்:-
ரூ. 509 -க்கு 84 நாள்கள் அன்லிமிட்டெட் வாய்ஸ் கால் மற்றும் 900 எஸ்எம்எஸ்-கள்.
ரூ. 1,999 -க்கு ஓராண்டுக்கு அன்லிமிட்டெட் வாய்ஸ் கால் மற்றும் 300 எஸ்எம்எஸ்-கள் இலவசம்.
போன் அழைப்புகளை மட்டுமே பயன்படுத்தும் வாடிக்கையாளர்களுக்கு இந்தத் திட்டம் உதவும் என்று கூறப்படுகிறது.
Tags: தொழில்நுட்பம்