தமிழக அரசின் கறவை மாடு கடன் திட்டம் ரூ 1 லட்சத்து 20 ஆயிரம் பெற விண்ணப்பிக்கலாம் முழு விவரம்
தமிழக அரசின் கறவை மாடு கடன் திட்டம் ரூ 1 லட்சத்து 20 ஆயிரம் பெற விண்ணப்பிக்கலாம் முழு விவரம்
தமிழ்நாட்டில் பிற்படுத்தப்பட்டோருக்கான பொருளாதாரம் மேம்பாட்டை அதிகப்படுத்தக் கறவை மாடுகளை வாங்குவதற்கான கடன் திட்டம் தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோர் பொருளாதார மேம்பாட்டுக் கழகம் மூலம் செயல்படுத்தப்படுகிறது.இந்த திட்டத்தின் கீழான உதவி தமிழ்நாடு கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் இணையம் (ஆவின்) / மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் ஒன்றியம் மூலம் வழங்கப்படுகிறது.இந்த திட்டத்தின் கீழ் பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவுச் சங்கங்களின் உறுப்பினர்களில் பயனாளிகளைத் தேர்ந்தெடுத்து அதிகபட்சமாக ஒரு பயனாளிகளுக்கு இரண்டு கறவை மாடுகள் (எருமை உட்பட) வாங்க ரூ.1,20,000, கறவை மாடு ஒன்றுக்கு ரூ.60,000 வழங்கப்படுகிறது.
பிற்படுத்தப்பட்டோர், மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை
தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோர் பொருளாதார மேம்பாட்டுக் கழகம் லிமிடெட் - (TABCEDCO)
கறவை மாடு வாங்குவதற்கான கடன் திட்டம்
தமிழ்நாடு கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் இணையம் (ஆவின்) / மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் ஒன்றியம் மூலம் வழங்கப்படுகிறது.
பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கங்களின் உறுப்பினர்களில் பயனாளிகளைத் தேர்ந்தெடுத்து பால் பண்ணை தொடங்குவதற்கு உயர்ந்த பட்சமாக ஒரு பயனாளிக்கு 2 கறவை மாடுகள் (எருமை உட்பட) வாங்க ரூ.1,20,000, கறவை மாடு ஒன்றுக்கு ரூ.60,000 வழங்கப்படும்.
தகுதிகள்:-
பிற்படுத்தப்பட்டோர் / மிகப்பிற்படுத்தப்பட்டோர் / சீர்மரபினர்
ஆண்டு வருமானம் ரூ. 3 லட்சத்திற்குள்.
வயது:-
18 -60 வரை
மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் உறுப்பினராக இருத்தல் வேண்டும்.
குடும்பத்தில் ஒருவருக்கு மட்டும்.
தேவைப்படும் ஆவணங்கள்:-
சாதி, வருமானம் மற்றும் பிறப்பிடச் சான்றிதழ்.
வங்கி கோரும் அடமானத்திற்குரிய ஆவணங்கள்,
சாதி, வருமானம் மற்றும் பிறப்பிடச் சான்றிதழ்.
விண்ணப்பிக்கும் முறை:-
தமிழ்நாடு கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் இணையம் (ஆவின்) / மாவட்ட கூட்டுறவு பால்
உற்பத்தியாளர்கள் ஒன்றியம். கூட்டுறவு கடன் சங்கங்கள் (ம) வங்கிகள், ஆகிய இடங்களில் விண்ணப்பிக்க வேண்டும்
Tags: தமிழக செய்திகள்