Breaking News

17 வயதில் சோகம் பளுதூக்கும் வீராங்கனை பயிற்சியின் போது 270 கிலோ எடை கழுத்தில் விழுந்து மரணம் வீடியோ இணைப்பு

அட்மின் மீடியா
0

17 வயது பளுதூக்கும் வீராங்கனை பயிற்சியின் போது 270 கிலோ எடை கழுத்தில் விழுந்து மரணம் வீடியோ இணைப்பு

ராஜஸ்தான் மாநிலம் பைகானாரை சேர்ந்த தேசிய பளு தூக்கும் வீராங்கனை யாஷ்டிகா ஆச்சார்யா(17) ஜிம்மில் பயிற்சியாளருடன் 270 கிலோ எடையைத் தூக்க பயிற்சி செய்து கொண்டிருந்த போது எதிர்பாராத விதமாக அவரது கழுத்தில் விழுந்தது. இதில் அவர் கழுத்து எழும்பு உடைந்து அவர் உயிரிழந்தார்

ராஜஸ்தான் மாநிலம் பைகானர் மாவட்டத்தைச் சேர்ந்த தேசிய பளு தூக்கும் வீராங்கனை யாஷ்டிகா ஆச்சார்யா(17) நேற்று யாஷ்டிகா வழக்கம் போல் ஜிம்மில் பளுதூக்கும் பயிற்சியில் அவரது பயிற்சியாளருடன் ஈடுபட்டிருந்தார். 

யாஷ்டிகா சுமார் 270 கிலோ எடையைத் தூக்க பயிற்சி செய்து கொண்டிருந்தார்.அப்போது, ​​எதிர்பாராத விதமாக, எடை அவரது கழுத்தில் விழுந்தது. இந்த சம்பவத்தில் யாஷ்டிகாவின் கழுத்து எலும்பு முறிந்தது.  உடனடியாக யாஷ்டிகாவை மீட்டு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொன்டு சென்றனர். ஆனால், மருத்துவர்கள் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக அறிவித்தனர்.

 யாஷ்டிகா ஆச்சார்யா இளையோருக்கான தேசிய விளையாட்டுப் போட்டிகளில் பவர் லிஃப்டிங்கில் தங்கப்பதக்கம் பெற்றவர் ஆவார்.

வீடியோ பார்க்க இங்கு கிளிக் செய்யவும்:-

https://x.com/adminmedia1/status/1892421984933261638

17-year-old weightlifter Yashtika Acharya died in Bikaner, she was lifting 270 kg weight during training

அட்மின் மீடியா செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள 

Follow as on google news             :- CLICK HERE 

follow us on twitter                       :- CLICK HERE 

Follow us on Facebook                 :- CLICK HERE 

Follow us on telegram                  :- CLICK HERE 

Follow us on whatsapp channel   :- CLICK HERE 

Follow as on Instagram                :- CLICK HERE 

download our app play store        :- CLICK HERE

Tags: இந்திய செய்திகள் வைரல் வீடியோ

Give Us Your Feedback