Breaking News

ரீல்ஸ் வீடியோ எடுக்க 20 அடி உயரத்தில் இருந்து ஆற்றில் குதித்த பெண் மருத்துவர் உயிரிழப்பு வீடியோ

அட்மின் மீடியா
0

ரீல்ஸ் வீடியோ எடுக்க 20 அடி உயரத்தில் இருந்து ஆற்றில் குதித்த பெண் மருத்துவர் உயிரிழப்பு வீடியோ



ஹைதராபாத்தின் நம்பள்ளி பகுதியைச் சேர்ந்த அனன்யா மோகன் ராவ் (26) என்ற மருத்துவர் அடையாளம் காணப்பட்டுள்ளார். அவர் ஹைதராபாத்தில் உள்ள வி.கே.சி மருத்துவமனையில் பணிபுரிந்து வந்தார். 

அனன்யா ராவ் தனது தோழிகளான அஷிதா மற்றும் சாத்விக் ஆகியோருடன் செவ்வாய்க்கிழமை மாலை விடுமுறைக்காக தெலுங்கானாவில் இருந்து தனது நண்பர்களுடன் கர்நாடக மாநிலம் கொப்பலில் உள்ள சுற்றுலா தலங்களை பார்வையிட வந்திருந்தார்.

அப்போது அவர் தங்கியிருந்த விருந்தினர் மாளிகைக்குப் பின்னால் அமைந்துள்ள துங்கபத்ரா நதியில் நீந்தச் சென்றனர்.  

அப்போது ரீல்ஸ் வீடியோ எடுக்க அனன்யா அங்கிருந்த 20 அடி உயர பாறையில் இருந்து ஆற்றில் குதித்துள்ளார். ஆற்றில் குதித்தவர் வலுவான நீரோட்டம் காரணமாக அவர் அடித்துச் செல்லப்பட்டதாக கூறப்படுகின்றது

இதையடுத்து உடன் இருந்த நண்பர்கள் கங்காவதி புறநகர் போலீசாருக்கு தகவல் அளித்தனர். விரைந்து வந்த போலீசார், தீயணைப்பு படையினர் உதவியுடன் அனன்யாவின் உடலை தேடினர். ஆனால் அவரது உடல் கிடைக்கவில்லை. அவரது உடல் பாறை இடுக்குகளில் சிக்கி இருக்கலாம் என்று கூறப்படுகிறது. 

தண்ணீர் வரத்து அதிகமாக இருப்பதால் மீட்பு குழுவினரால் பாறை இடுக்குகளுக்குள் செல்ல முடியவில்லை. இருப்பினும் போலீசார், சம்பவம் நடைபெற்று 24 மணி நேரம் தாண்டியும் தீயணைப்பு படையினர் டாக்டர் அனன்யாவின் உடலை தேடும் பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். இதுகுறித்து கங்காவதி புறநகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். மேலும் கங்காவதி சப்-டிவிஷன் டி.வை.எஸ்.பி சித்தலிங்கப்ப கவுடா பாட்டீல், கங்காவதி ரூரல் போலீஸ் ஸ்டேஷன் பி.ஐ.சோமசேகர் ஜூட்டல் மற்றும் கங்காவதி மற்றும் கொப்பளத்தை சேர்ந்த தீயணைப்பு படையினர் சம்பவ இடத்தில் குவிக்கப்பட்டுள்ளனர்.



மருத்துவர் ஒரு பாறையிலிருந்து குதிக்கும் கடைசி தருணங்களின் காட்சிகள் அவரது தோழியின் மொபைல் போனில் பதிவாகியுள்ளன இந்த வீடியோ இணையத்தில் வைரல் ஆகின்றது

A 26-year-old doctor, Ananya Mohan Rao, from Hyderabad went missing on Feb 19 after jumping into the Tungabhadra River in Karnataka's Koppal district. Strong currents are feared to have swept her away. A search operation is underway with diving experts.

வீடியோ பார்க்க இங்கு கிளிக் செய்யவும்:-

https://x.com/adminmedia1/status/1892793811962622313

Tags: இந்திய செய்திகள் வைரல் வீடியோ

Give Us Your Feedback