புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர் சத்துணவுத் திட்டத்தில் அலுவலக உதவியாளர் வேலைவாய்ப்பு 8 ம் வகுப்பு படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்
புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர் சத்துணவுத் திட்டத்தில் அலுவலக உதவியாளர் வேலைவாய்ப்பு 8 ம் வகுப்பு படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்
சமூக நலன் மற்றும் மகளிர் உரிமை துறை புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர் சத்துணவு திட்ட செயலாக்கத்திற்காக் ஒப்பந்த அடிப்படையில் கீழ்காணும் விவரப்படி புதிதாக தோற்றுவிக்கப்பட்ட பணியிடங்களை தகுதி வாய்ந்த நபர்களை கொண்டு ஒப்பந்த அடிப்படையில் தற்காலிகமாக நிரப்பிடும் பொருட்டு விண்ணப்பங்கள் கீழ்காணும் நிபந்தனைகளுக்குட்பட்டு பெறப்படுகிறது.
தமிழகத்தில் உள்ள செங்கல்பட்டு சமூக நலன் மற்றும் மகளிர் உரிமை துறை புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர் சத்துணவுத் திட்டத்தில் காலியாக உள்ள அலுவலக உதவியாளர், தகவல் தொகுப்பாளர் மற்றும் கணினி உதவியாளர் உள்ளிட்ட மூன்று பதவிகளுக்கு விண்ணப்பிக்கலாம்
பணி:-
அலுவலக உதவியாளர் (Office Assistant)
தகவல் தொகுப்பாளர் (Information compiler)
கணினி உதவியாளர் (Computer Assistant)
கல்வி தகுதி:-
அலுவலக உதவியாளர் பணிக்கு 8ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
தகவல் தொகுப்பாளர் பணிக்கு அரசு அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் ஏதேனும் ஒரு துறையில் பட்டம் பெற்றிருக்க வேண்டும். கணினியில் M.S. Office அனுபவம் பெற்றவர்களாக இருத்தல் வேண்டும். கீழ்நிலை தட்டச்சிற்கு தமிழ் மற்றும் ஆங்கிலம் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்
கணினி உதவியாளர் பணிக்கு அரசு அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் ஏதேனும் ஒரு துறையில் பட்டம் பெற்றிருக்க வேண்டும். கணினியில் M.S. Office அனுபவம் பெற்றவர்களாக இருத்தல் வேண்டும். கீழ்நிலை தட்டச்சிற்கு தமிழ் மற்றும் ஆங்கிலம் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்
விண்ணப்பிக்க கடைசி நாள்:-
18.02.2025
மேலும் விவரங்களுக்கு இங்கு கிளிக் செய்யவும்:-
https://cdn.s3waas.gov.in/s39778d5d219c5080b9a6a17bef029331c/uploads/2025/02/2025021027.pdf
பணி நிபந்தணைகள்:-
1.இப்பணியிடம் தொகுப்பூதியம் அடிப்படையில் முற்றிலும் தற்காலிகமானது.
2.இப்பணியிடம் 11 மாத காலத்திற்கு மட்டுமே.
3. பணியமர்த்தப்படும் பணியாளர் ரூ.200/- க்கான முத்திரைத் தாளில் ஒப்பந்தம் அளிக்கப்படவேண்டும்.
4.பணியமர்த்தப்படும் பணியாளர் வேலை திருப்திகரமாக இருப்பின் உரிய பணி தொடராணை பெறப்பட்டு 11 மாத காலம் முடிந்த பின் இடைவெளி விட்டு பணிக்காலம் நீட்டிப்பு செய்யப்படும்.
5. இப்பணியிடம் முற்றிலும் தற்காலிகமானது எவ்விதமான முன்னுரிமையோ அல்லது பணி நிரந்தரம் செய்ய கோரவோ இயலாது.
6.இப்பணியிடம் அரசு அனுமதிக்கும் காலம் மற்றும் நிதி ஒதுக்கீடு வழங்கப்படும் காலம் வரை மட்டுமே அனுமதிக்கப்படும்.
7.தமிழ்நாடு அரசு அலுவலரின் விதிமுறைகள் பொருந்தாது.
மேற்படி விண்ணப்பம் மாவட்ட ஆட்சியரகம் செங்கல்பட்டு 2ஆம் தளம் B - பிரிவு அறை எண்.3-ல் அலுவலக நேரம் காலை 10.00 மணி முதல் மாலை 5.45 மணி வரை பெறப்படும் விண்ணப்ப நாட்களுக்கு பிறகு பெறப்படும் விண்ணப்பங்கள் பரிசீலணை செய்யப்படாது.
அட்மின் மீடியா செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள
Follow as on google news :- CLICK HERE
follow us on twitter :- CLICK HERE
Follow us on Facebook :- CLICK HERE
Follow us on telegram :- CLICK HERE
Follow us on whatsapp channel :- CLICK HERE
Follow as on Instagram :- CLICK HERE
download our app play store :- CLICK HERE
Tags: வேலைவாய்ப்பு