மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உதவியாளர் வேலைவாய்ப்பு உடனே விண்ணப்பியுங்கள் முழு விவரம்
தென்காசி மாவட்டத்தில் புதிதாக தோற்றுவிக்கப்பட்டுள்ள மாவட்ட ஆட்சித் தலைவர் (சத்துணவு பிரிவு) அலுவலகத்திற்கு ஒப்பந்த அடிப்படையில் ஒரு அலுவலக உதவியாளர் பணியிடத்திற்கு கீழ்க்காணும் தகுதியுள்ள நபர்கள் விண்ணப்பிக்கலாம்.
அதேபோல்
தென்காசி மாவட்டத்தில் புதிதாக தோற்றுவிக்கப்பட்டுள்ள மாவட்ட ஆட்சித் தலைவர் (சத்துணவு பிரிவு) அலுவலகத்திற்கு ஒப்பந்த அடிப்படையில் தகவல் தொகுப்பாளர் மற்றும் கணினி அனுபவத்துடன் கூடிய உதவியாளர் ஆகிய பணியிடங்களுக்கு கீழ்க்காணும் தகுதியுள்ள நபர்கள் விண்ணப்பிக்கலாம்.
அலுவலக உதவியாளர் பணிக்கு தகுதிகள்:-
1 10 ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
2 இரு சக்கர வாகனம் ஓட்ட தெரிந்தவராக இருத்தல் வேண்டும்.
தகவல் தொகுப்பாளர் மற்றும் கணினி அனுபவத்துடன் கூடிய உதவியாளர் கல்வித்தகுதி
1 அரசு அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக் கழகத்தால் ஒரு பட்டம் (10-2. 3) பெற்றிருக்க வேண்டும்.
2 கணினியில் MS office அனுபவம் பெற்றவராக இருத்தல் வேண்டும்.
3 குறைந்த பட்சம் கீழ்நிலை தட்டச்சில் ஆங்கிலம் மற்றும் தமிழ் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
வயதுவரம்பு:-
விண்ணப்பதாரர்கள் 01012025 அன்று 21 வயது பூர்த்தியடைந்தவர்களாகவும், 40 வயதுக்கு மிகாமலும் இருக்க வேண்டும்.
விண்ணப்பிக்க:-
விண்ணப்பங்கள்https://tenkasi.nic.in/ என்ற இணையதள முகவரியிலிருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
விண்ணப்பங்கள் அஞ்சல் வாயிலாக மட்டுமே அனுப்பி வைக்க வேண்டும்.
விண்ணப்பிக்க கடைசி நாள்:-
15.02.2025, மாலை 5 மணி
விண்ணப்பிக்க வேண்டிய தபால் முகவரி:-
மாவட்ட ஆட்சித் தலைவர்.
(சத்துணவு பிரிவு) அலுவலகம்,
தென்காசி ஊராட்சி ஒன்றிய அலுவலக வளாகம்,
தென்காசி-62781
குறிப்பு:-
இப்பணியிடம் தொகுப்பூதிய அடிப்படையில் முற்றிலும் தற்காலிகமானது ஆகும்.
இப்பணியிடம் 11 மாத காலத்திற்கு மட்டுமே அனுமதிக்கப்படும்.
பணி நியமனம் செய்பவருக்குரிய அவலம் யாவட்ட ஆட்சித்தலைவர் ஆகும். அவரே தகுதியான ஆட்களை உரிய முறையில் (நேர்முகத்தேர்வு) தேர்வு செய்வார்.
வட்டார அலுவலகங்களில் உடன் பணிபுரியும் வகையில் இப்பணியிடங்கள் நிரப்பப்படும். பணிநியமனம் செய்யப்படும் பணியாளர்களிடமிருந்து ரூ.200/-க்கான முத்திரைத்தாளில் ஒப்பந்தப் பணி பத்திரம் பெறப்படும்.
பணியமர்த்தப்படும் பணியாளர் வேலை திருப்திகரமாக இருப்பின் இப்பணியிடத்திற்கு உரிய பணி தொடராணை பெறப்பட்டு, பணிக்கால நீட்டிப்பு வழங்கப்படும். ஒவ்வொரு 11 மாத காலம் முடிவிற்குப் பின் இடைவெளி விட்டு பணியிடம் புதுப்பிக்கப்படும்.
இப்பணியிடம் முற்றிலும் தற்காலிகமானது. எவ்விதமான முன்னுரிமையோ அல்லது பணி நிரந்தரம் செய்ய கோரகோ இயலாது.
இப்பணியிடம் அரசு அனுமதிக்கும் காலம் மற்றும் நிதி ஒதுக்கீடு வழங்கப்படும் காலம் வரைமட்டுமே அனுமதிக்கப்படும்.
Tags: வேலைவாய்ப்பு