முன்பதிவு செய்யப்படாத ரயில் பெட்டிகள் எண்ணிக்கை குறைப்பு என்ற தகவல் பொய்யானது - ரயில்வே வாரியம் விளக்கம்
முன்பதிவு செய்யப்படாத ரயில் பெட்டிகள் எண்ணிக்கை குறைப்பு என்ற தகவல் பொய்யானது - ரயில்வே வாரியம் விளக்கம்
பரவிய செய்தி:-
நாடு முழுவதும் இயக்கப்படும் ரயில்களில் முன்பதிவில்லா பெட்டிகளின் எண்ணிக்கை 4 -இல் இருந்து 2 -ஆக குறைத்துள்ளது இந்திய ரயில்வே!
26 ரயில்களில் முன்பதிவில்லா பெட்டிகளை குறைத்து, அதற்கு பதிலாக, AC 3 Tier பெட்டிகளை இணைக்க திட்டம் என பரவலாக தகவல்கள் வெளியாகின.
ரயில்வே வாரியம் விளக்கம்:-
முன்பதிவு செய்யப்படாத ரயில் பெட்டிகள் எண்ணிக்கை குறைப்பு என்ற தகவல் ஆதாரமற்றது என ரயில்வே தெரிவித்துள்ளது. மேலும், 2ம் வகுப்பு பொது பெட்டிகளின் எண்ணிக்கையை மார்ச் முதல் அதிகரிக்க ரயில்வே திட்டமிட்டிருப்பதாக விளக்கம் அளித்துள்ளது.
தெற்கு ரயில்வே சாா்பில் இயக்கப்படும் விரைவு ரயில்களில் முன்பதிவு செய்யப்படாத பெட்டிகளின் எண்ணிக்கையை குறைக்க திட்டமிட்டுள்ளதாக வெளியாகிவரும் செய்திகள் ஆதாரமற்றவை மற்றும் தவறானவை. விரைவு ரயிலில் முன்பதிவு செய்யப்படாத பயணிகள் பயனடையும் வகையில் பிப்ரவரி மாதம் முதலே பொதுப் பெட்டிகளின் எண்ணிக்கையை அதிகரிக்க தெற்கு ரயில்வே சாா்பில் திட்டமிடப்பட்டது.
ஆனால், அதற்காக ஒதுக்கப்பட்ட பெட்டிகள் தற்போது மகா கும்பமேளாவுக்கு செல்லும் பயணிகளின் வசதிக்காக தமிழகம் மற்றும் கேரளத்திலிருந்து வாரணாசிக்கு இயக்கப்படும் சிறப்பு ரயில்களில் பயன்படுத்தப்படுகின்றன.
இந்நிலையில், மகா கும்பமேளா பிப். 26-ஆம் தேதியுடன் நிறைவடைவதைத் தொடா்ந்து மாா்ச் மாதம் முதல் இந்தப் பெட்டிகள் தெற்கு ரயில்வே சாா்பில் இயக்கப்படும் விரைவு ரயில்களில் கூடுதலாக இணைக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது
Clarification on wrong news in Social media/Electronic Media that Southern Railway is planning to reduce number of General Coaches
The news is baseless and misconceived. Rather Southern Railway planned to Increase the General Second Class Coaches with effect from March, 2025 for the benefit of Unreserved Passengers
It was earlier planned to effect the increase of the General Coaches from the month of February-2025. The additional coaches required for these augmentations are being utilised for running special trains from Tamilnadu and Kerala to Varanasi for the benefit of passengers visiting Mahakumbh. And the Coaches will be available in the first week of March 2025. And these changes in the train composition will be implemented in the month of March 2025. The following trains will be added one or two GS Coaches to make the total number of GS coaches into four per train.
ஆதாரம் பார்க்க இங்கு கிளிக் செய்யவும்
https://x.com/adminmedia1/status/1893144205930963422
Tags: FACT CHECK இந்திய செய்திகள்