Breaking News

மூலப்பத்திரம் இல்லாவிட்டாலும் நகலை சரிபார்த்து பதிவு செய்ய உத்தரவு

அட்மின் மீடியா
0

மூலப்பத்திரம் இல்லாவிட்டாலும் நகலை சரிபார்த்து பதிவு செய்ய உத்தரவு

அசல் ஆவணங்களை காட்டினால் மட்டுமே பத்திரம் செய்ய பதிவு செய்யப்படும் என்று சார்பதிவாளர்கள் பொதுமக்களை திருப்பி அனுப்பக் கூடாது. 

மூல ஆவணங்களின் நகல் மற்றும் சார்பதிவாளர் அலுவலகங்களில் உள்ள நகல் ஆவணத்தை பார்த்து பத்திரம் பதிவு செய்ய சார்பதிவாளர்களுக்கு கூடுதல் ஐஜி உத்தரவு

பத்திரப்பதிவுக்கு மூலப்பத்திரம் அல்லது காணாமல் போன மூலப் பத்திரம் கிடைக்கவில்லை என்ற போலீஸ் சான்று ஆகியவை இல்லாவிட்டாலும், பத்திர நகலை சார்பதிவாளர் அலுவலக ஆவணத்துடன் ஒப்பிட்டு பத்திரப்பதிவு செய்ய வேண்டும் என ஐகோர்ட் உத்தரவிட்டதை அடுத்து இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது


சென்னை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கில் மூலப்பத்திரம் இல்லாவிட்டாலும், மூலப்பத்திரம் காணாமல் போனதாக போலீஸ் சான்று இல்லாவிட்டாலும் பத்திர நகலை சார்பதிவாளர் அலுவலக ஆவணத்துடன் ஒப்பிட்டு பத்திரப்பதிவு செய்ய முடியும் என உத்தரவிட்டது

Tags: தமிழக செய்திகள்

Give Us Your Feedback