Breaking News

வால்பாறை அருகே வெளிநாட்டு சுற்றுலா பயணியை காட்டு யானை தாக்கி உயிரிழப்பு வைரல் வீடியோ

அட்மின் மீடியா
0

வால்பாறை அருகே வெளிநாட்டு சுற்றுலா பயணியை காட்டு யானை தாக்கி உயிரிழப்பு வைரல் வீடியோ



கோவை - வால்பாறை அருகே டைகர் பள்ளத்தாக்கு காட்சிமுனை பகுதியில் ஜெர்மனியைச் சேர்ந்த மைக்கேல் (60) என்ற வெளிநாட்டு சுற்றுலா பயணி பொள்ளாச்சியில் இருந்து பைக்கில் சென்றப்போது காட்டு யானை தாக்கியதில், பலத்த காயம் அடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்

கோவை மாவட்டத்தில் வால்பாறையில் நேற்று மாலை 6.30 மணியளவில் வால்பாறை-பொள்ளாச்சி மலைப்பாதையில் வாட்டர்பால்ஸ் அருகே எஸ்டேட் டைகர் வேலி பள்ளத்தாக்கு காட்சி முனை பகுதியில் காட்டு யானை ஒன்று சாலையின் குறுக்கே நின்றது. இதனை பார்த்த வாகன ஓட்டிகள் சாலையோரத்தில் வாகனங்களை நிறுத்தி அங்கேயே நின்று விட்டனர்

இந்நிலையில் பொள்ளாச்சியில் இருந்து ஜெர்மனி நாட்டை சேர்ந்த சுற்றுலா பயணி மைக்கேல் (வயது 70) மோட்டார் சைக்கிளில் வால்பாறை நோக்கி செல்லும் போது வாட்டர் பால்ஸ் அருகே வந்ததும், சாலையில் யானை நிற்பதை பார்த்தும் மோட்டார் சைக்கிளில் சென்றார். 

அப்போது சாலையில் நின்ற யானை மோட்டார் சைக்கிளுடன் அவரை தூக்கி வீசியது. தொடர்ந்து அவரை தூக்கி வீசிவிட்டு வனப்பகுதிக்குள் சென்றது. இதில் அவர் பலத்த காயம் அடைந்து மயங்கினார்.

அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு பொள்ளாச்சி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக உயிரிழந்தார். யானை நிற்பதை தெரிந்தும் மோட்டார் சைக்கிளில் யானைக்கு அருகில் சென்ற ஜெர்மனி நாட்டு சுற்றுலா பயணி யானை தாக்கி இறந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பான வீடியோ காட்சி சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

வீடியோ பார்க்க இங்கு கிளிக் செய்யவும்:-

https://x.com/adminmedia1/status/1886979673244225650

Tags: இந்திய செய்திகள் வைரல் வீடியோ

Give Us Your Feedback