நாம் தமிழர் கட்சியில் இருந்து காளியம்மாள் விலகிச் செல்வதாக இருந்தால் செல்லட்டும் - சீமான்
காளியம்மாள் விலகிச் செல்வதாக இருந்தால் செல்லட்டும் - சீமான்
நாம் தமிழர் கட்சி சார்பில் தூத்துக்குடி மணப்பாட்டில் காளியம்மாள் கலந்து கொள்ளும் நிகழ்ச்சியில் கட்சி பெயர் குறிப்பிடாமல் சமூக செயற்பாட்டாளர் என குறிப்பிடப்பட்டுள்ளது
சீமான் செய்தியாளர் சந்திப்பில்:-
எங்கள் கட்சிக்கு இது களையுதிர் காலம் ,காளியம்மாள் பிற கட்சியில் இணைய சுதந்திரம் உள்ளது. வேறு கட்சிக்கு செல்லலாமா வேண்டாமா என முடிவு எடுக்கும் உரிமை காளியம்மாளுக்கு உண்டு இவ்வாறு தெரிவித்தார்.
கடந்த சில மாதங்களாக நாம் தமிழர் கட்சி நிகழ்வுகளில் பங்கேற்காமல் இருந்து வந்த காளியம்மாள் நாதகவிலிருந்து ல் விலகும் முடிவு குறித்து விரைவில் அறிவிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது
நாம் தமிழர் கட்சியின் மகளிர் பாசறை மாநில ஒருங்கிணைப்பாளர் காளியம்மாள் தனது பொறுப்புகளில் இருந்து விலகியுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
தூத்துக்குடி மாவட்டம் மணப்பாட்டில் நடைபெறும் நிகழ்ச்சி ஒன்றின் அழைப்பிதழில் நாம் தமிழர் கட்சியின் பொறுப்பை குறிப்பிடாமல், சமூக செயற்பாட்டாளர் என குறிப்பிட்டு காளியம்மாளின் பெயர் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த அழைப்பிதழ் தற்போது வைரலாகி வருகிறது. காளியம்மாளின் பெயருக்கு பின் சமூக செயற்பாட்டாளர் என குறிப்பிடப்பட்டுள்ளதால், அவர் நாம் தமிழர் கட்சியில் உள்ளாரா? அல்லது விலகியுள்ளாரா? என்று தெரியவில்லை.
இந்நிலையில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானிடம் காளியம்மாள் விலகல் குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதில் அளித்த சீமான்,
இலையுதிர் காலம் போல எங்கள் கட்சிக்கு இது களையுதிர் காலம் போன்றது. யார் வேண்டுமானாலும் கட்சியிலிருந்து செல்லலாம். அது அவர்களின் தனிப்பட்ட முடிவு. கட்சியில் இருப்பதற்கும் விலகுவதற்கும் காளியாம்மாளுக்கு முழு சுதந்திரம் உள்ளது.வேறு கட்சிக்கு செல்லலாமா வேண்டாமா என முடிவு எடுக்கும் உரிமை காளியம்மாளுக்கு உண்டு, என தெரிவித்தார்.
Tags: அரசியல் செய்திகள்