பெண்கள் மதரஸா திறப்பு விழாவில் என் காலத்தில் இது போல் மதரஸா இல்லையே என கண்ணீர் விட்டு அழுத மும்தாஜ் வைரல் வீடியோ
தமிழ் சினிமாவில் எடுத்த எடுப்பிலேயே கவர்ச்சி நடிகையாக அறிமுகமாகி அதிக வரவேற்பு பெற்றவர் நடிகை மும்தாஜ். இயக்குனர் டி ராஜேந்திரன் இயக்கிய மோனிஷா என் மோனலிசா திரைப்படத்தின் மூலமாகதான் முதன்முதலாக நடிகையாக அறிமுகமானார் மும்தாஜ். அதன் பின்பு பிஸியான நடிகையாக தமிழ் மற்றும் தெலுங்கு திரையுலகில் வலம் வந்தார்.
ஒரு கட்டத்தில் பட வாய்ப்புகள் குறையவே சினிமாவில் இருந்து விலகினார்.44 வயதாகும் மும்தாஜ் இதுவரையில் திருமணம் செய்து கொள்ளாமலே இருக்கிறார். சினிமாவில் இருந்து முழுவதுமாக விலகிய மும்தாஜ் தற்போது முழுக்க முழுக்க இறைவழிபாட்டிலும் ஆன்மீகத்திலும் இறங்கிவிட்டார்.மும்தாஜ் ஆன்மீகவாதியாகவே மாறிவிட்டார்.
மயிலாடுதுறை மாவட்டத்தில் சீர்காழியில் புதிய பெண்கள் மதரஸா திறப்பு விழாவில் கலந்து கொண்டு பேசிய நடிகை மும்தாஜ் என் வாழ்க்கையில் நான் என்ன செய்து கொண்டிருந்தேன்.. உங்களுக்கு நன்றாக தெரியும்.
நீங்கள் நிறைய பேர் என்னை திட்டி இருப்பீர்கள். நிறைய பேர் என்னென்னவோ எனக்காக செய்திருப்பீர்கள்.. ஆனால் இன்று பாருங்கள்..உங்கள் முன்னாடி வந்து இஸ்லாமிய பெண்ணாக நின்று பேசிக்கொண்டிருக்கிறேன்
அது எனக்கு ரொம்ப ரொம்ப சந்தோஷத்தை கொடுக்கிறது.. இதற்கு முன்னாடி நான் வெளியில் போய்க்கொண்டிருந்த போது, என்னை சில பெண்கள் ஒரு மாதிரியாக பார்ப்பார்கள்.. எனக்கு மனசுக்கு ரொம்ப கஷ்டமாக இருக்கும்.. என்னை இப்படி பார்க்கிறார்கள் என்றால் இறைவன் முன்னாடி எப்படி போய் நிற்பேன் என்று கலங்கினேன் என பேசினார்
இந்த வீடியோ தான் தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது
மெக்கா சென்ற போது:-
இறைவன் அருளால் இரண்டாவது முறையாக மெக்கா வந்துள்ளேன். என்னைப் பற்றி இந்த உலகம் என்ன பேசினாலும், நான் தற்போது புதிதாக பிறந்த குழந்தையாக உணர்கிறேன். நீங்கள் மெக்கா, மெதினாவை பாருங்கள். இந்த உலகை நினைத்து கவலைக்கொள்ளாமல் அல்லாஹ்வை நினைத்து வழிபடுங்கள்.
எனது பாவம் செய்த கண்கள் மெக்காவை பார்த்துவிட்டன. ஆடிய கால்கள் காபாவில் நடந்துவிட்டன. என்னால் இதை செய்ய முடியும்போது உங்களாலும் இதனை செய்ய முடியும்.
நல்ல வாழ்க்கையை வாழ இறைவனை வேண்டுங்கள். அல்லாஹ் உங்களுக்கு என்றென்றும் உறுதுணையாக இருப்பார். யாருக்காகவும், எந்த நிலையிலும் மன உறுதியை விட்டுவிடாதீர்கள் எனக் கூறியுள்ளார்.
வீடியோ பார்க்க இங்கு கிளிக் செய்யவும்:-
https://x.com/kumudamNews24x7/status/1893499143928070398
Tags: இந்திய செய்திகள் வைரல் வீடியோ