Breaking News

காசா பகுதியை அமெரிக்கா கைப்பற்றும் டிரம்ப் அதிரடி அறிவிப்பு - அரபு நாடுகள் எதிர்ப்பு முழு விபரம்

அட்மின் மீடியா
0

காசாவை கைப்பற்றி கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வருவோம் - டிரம்ப் அதிரடி அறிவிப்பு



பாலஸ்தீனத்தின் காசா பகுதியை அமெரிக்கா கைப்பற்றும் எனவும் பாலஸ்தீன மக்கள் எகிப்து, ஜோர்டான் போன்ற மத்திய கிழக்கு நாடுகளுக்கு அனுப்பப்படுவார்கள் என டிரம்ப் அறிவிப்பு

பாலஸ்தீனத்தின் காசா நகரை நிர்வகித்து வரும் ஹமாஸ் அமைப்பினருக்கும் கடந்த 2023-ம் ஆண்டு அக்டோபர் மாதம் போர் ஏற்பட்டது. 15 மாதங்களுக்கும் மேலாக நீடித்து வந்த போரினை முடிவுக்கு கொண்டு வர கத்தார் உள்ளிட்ட நாடுகள் முயற்சியால் இரு தரப்பும் போர் நிறுத்தத்தில் கையெழுத்திட்டுள்ளது

இந்நிலையில் வெள்ளை மாளிகையில், இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு, ஜனாதிபதி டொனால்டு டிரம்ப் ஆகியோர் சந்தித்து பேசினர்

இந்த சந்திப்புக்கு பிறகு, வாஷிங்டனில் உள்ள வெள்ளை மாளிகையின் கிழக்கு அறையில் ஒரு செய்தியாளர் சந்திப்பின் போது அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் மற்றும் இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு வெள்ளை மாளிகையில் டோனால்டு டிரம்பும், கூட்டாக செய்தியாளர்களை சந்தித்தனர்.அப்போது அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப், 

காசா பகுதியை அமெரிக்கா கைப்பற்றும். காசாவை நாங்கள் கையாள்வோம். நாங்கள் அதை சொந்தமாக்கிக் கொள்வோம், மேலும் அந்த இடத்தில் உள்ள அனைத்து ஆபத்தான வெடிக்காத குண்டுகள் மற்றும் பிற ஆயுதங்களை அகற்றுவதற்கும், அந்த இடத்தை சமன் செய்வதற்கும், அழிக்கப்பட்ட கட்டிடங்களை அகற்றுவதற்கும் நாங்கள் பொறுப்பாவோம்," என்று திரு. டிரம்ப் கூறினார்.அதுமட்டுமின்றி, காஸாவில் வாழும் சுமார் 18 லட்சம் மக்கள், மற்ற அரபு நாடுகளுக்கு இடம்பெயர வேண்டும் என்றும் குறிப்பிட்டார்.

மேலும் பொருளாதாரத்தை மேம்படுத்தி அந்த பகுதி மக்களுக்கு வேலைவாய்ப்பு மற்றும் வீட்டு வசதி உள்ளிட்டவற்றை செய்து கொடுப்போம். தற்போது ஏற்பட்டுள்ள போர் நிறுத்த ஒப்பந்தம் மூலமாக அப்பகுதியில் அமைதியை நிலையை நாட்டுவோம்" என்று கூறினார்.

இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு அருகில் நின்று கொண்டிருந்தபோது, ​​திரு. டிரம்ப் இந்தக் கருத்துக்களைத் தெரிவித்தார்.

காசா முனையில் உள்ள பாலஸ்தீனியர்கள் எகிப்து மற்றும் ஜோர்டான் போன்ற மத்திய கிழக்கு நாடுகளுக்கு அனுப்பப்படுவார்கள் என்று டிரம்ப் கூறியுள்ளார். 

அரபுநாடுகள் எதிர்ப்பு:-

போரினால் சீரழிந்த காசவிலிருந்து பாலஸ்தீனர்களை வெளியேற்றும் எந்தவொரு திட்டத்தையும் நிராகரிப்பதாக, எகிப்தில் கூடிய அரபு நாடுகள் அறிவித்துள்ளன. ஜோர்டான், ஐக்கிய அரபு சிற்றரசு, சவூதி அரேபியா, கட்டார், எகிப்து, பாலஸ்தீன அதிகாரத் தரப்பு ஆகியவற்றுடன் அரபு லீக்கும் கூட்டாக அறிக்கை வெளியிட்டுள்ளது.

அனைத்துலகச் சட்டத்திற்கு ஏற்ப தங்கள் சொந்த மண்ணில் பாலஸ்தீன மக்களுக்கு இருக்கும் உரிமைகளை தாங்கள் ஆதரிப்பதாக, அவை தெளிவுப்படுத்தின.

எக்காரணம் கொண்டும் அவ்வுரிமை மறுக்கப்படக் கூடாது. குடியேற்ற நடவடிக்கைகள், வெளியேற்றம், வீடு இடிப்பு, நில அபகரிப்பு, கட்டாயமாக இடமாற்றம் செய்தல் என, என்ன பெயர் வைத்து அழைத்தாலும், அதற்கு தாங்கள் ஒப்புக் கொள்ளப் போவதில்லை என அந்த அரபு நாடுகள் திட்டவட்டமாகக் கூறின.

Tags: வெளிநாட்டு செய்திகள்

Give Us Your Feedback