பெண்கள் இலவச தையல் இயந்திரம் பெற விண்ணப்பிக்கலாம் விண்ணப்பிப்பது எப்படி? முழு விவரம் Free Sewing Machine Scheme 2025
மாண்புமிகு மனிதவள மேலாண்மைத்துறை அமைச்சர் திருமதி.என்.கயல்விழிசெல்வராஜ் அவர்கள் 26.06.2024 அன்று 2025-ம் ஆண்டிற்கான பொதுத்துறை மானியக் கோரிக்கையின் போது முன்னாள் படைவீர் நலன் சார்ந்த அறிவிப்பினை வெளியிட்டார்கள்.
அதன்படி, முன்னாள் படைவீரரின் மனைவி / கைம்பெண் மற்றும் திருமணமாகாத மகள்கள் அரசு மற்றும் அரசு சார்ந்த நிறுவனங்களில் குறைந்தது மூன்று மாத தையற் பயிற்சி சான்று பெற்றிருப்பின் அவர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் நோக்குடன் பயிற்சி வழங்கிய நிறுவனத்தால் இலவச தையல் இயந்திரம் வழங்கப்படாத நிலையில் ஒரு முறை மட்டும் தையல் இயந்திரம் வழங்கிட அறிவிப்பினை வெளியிட்டார்கள்.
மேலும், இது தொடர்பான விவரங்களுக்கு சென்னை, சைதாப்பேட்டையில் உள்ள உதவி இயக்குநர். முன்னாள் படைவீரர் நல அலுவலகத்தை நேரிலோ அல்லது தொலைபேசி வாயிலாக 044-22350780 தொடர்பு கொண்டு பயனடையுமாறு சென்னை மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.ரஷ்மி சித்தார்த் ஜகடே, இ.ஆ.ப. அவர்கள் தெரிவித்துள்ளார்.
விண்ணப்பத்துடன் இணைக்கப்பட வேண்டிய சான்றுகள்-
1. வட்டாட்சியரிடமிருந்துபெறப்பட்டவருமானச்சான்றுரூ. 72000/- ற்குள்
2.வட்டாட்சியரிடம்பெறப்பட்டஇருப்பிடச்சான்று
3.பதிவு பெற்ற தையல் நிறுவனத்திடமிருந்து பெறப்பட்ட தையல் பயிற்சிசான்று (குறைந்த பட்சம் 6 மாத பயிற்சி பெற்றிருக்க வேண்டும்)
4.வயதுசான்று (20 முதல் 40 வயது வரை தகுதி )
5. சாதிச் சான்று
6. விண்ணப்பதாரரின் புகைப்படம் - 2 ( வண்ணபுகைப்படம் – கடவுச்சீட்டு அளவு)
7. விதவை, கணவனால் கைவிடப்பட்டவர், ஆதரவற்றவர் என்பதற்கான சான்று
8.ஆதார் அடையாள அட்டை.
Tags: முக்கிய அறிவிப்பு முக்கிய செய்தி