சிறுபான்மையினர் வியாபாரம் செய்ய சுயமாக தொழில் தொடங்க தனிநபர் கடன் பெற விண்ணப்பிக்கலாம் - தமிழக அரசு அறிவிப்பு tamco loan details in tamil
தமிழ்நாடு சிறுபான்மையினர் பொருளாதார மேம்பாட்டுக் கழகம் மூலம் தனி நபர் கடன்,பெற விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது
தமிழ்நாடு அரசின் பிற்படுத்தப்பட்டோர், மிகப் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மை நலத்துறை சார்பில், தமிழ்நாடு சிறுபான்மையினர் பொருளாதார மேம்பாட்டு கழகம் தனிநபர் கடன் திட்டத்தை அறிமுகப்படுத்தி உள்ளது.
இதன் மூலம் 30 லட்சம் ரூபாய் வரை கடன் பெறலாம் எனவும், இதற்கான விண்ணப்பிக்கலாம் என தமிழக அரசு அறிவித்துள்ளது.
பிற்படுத்தப்பட்டோர், மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை
தமிழ்நாடு சிறுபான்மையினர் பொருளாதார மேம்பாட்டுக் கழகம்(TAMCO) தனிநபர் கடன் திட்டம்
தனிநபர் கடன் திட்டத்தின் ரூ.30.00 இலட்சம் வரையிலான திட்டங்களுக்கு தனி நபர்களுக்கு சுயமாக தொழில் / வியாபாரம் செய்ய / கறவை மாடுகள் வாங்க கடன் வழங்கப்படுகிறது. tamco loan details in tamil
தகுதிகள் :-
1. விண்ணப்பதாரர் மதவழி சிறுபான்மை இனத்தவரான இஸ்லாமியர்கள், கிறித்தவர்கள், சீக்கியர்கள், புத்தமதத்தவர்கள், பார்சிகள், ஜெயினர்கள் ஆகியோர்களில் ஒருவராக இருத்தல் வேண்டும்.
2. விண்ணப்பதார் 18 வயது முதல் 60 வயதுக்குள் இருக்க வேண்டும்.
3. ஒரு குடும்பத்தில் ஒருவருக்கு மட்டும் கடன் வழங்கப்படும்.
தேவையான ஆவணங்கள்:-
விண்ணப்பத்தாரர்கள் தங்களது விண்ணப்பங்களை கீழ்கண்ட ஆவணங்களின் நகலுடன் அந்தந்த மாவட்டபிற்படுத்தப்பட்டோர் (ம) சிறுபான்மையினர் நலஅலுவலர்கள்/ மண்டல கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் அலுவலகம் / கூட்டுறவு வங்கிகளில் சமர்பிக்க வேண்டும்.
1. சிறுபான்மையினர் மதச்சான்றிதழ்.
2. சாதி சான்றிதழ்.
3. வருமான சான்றிதழ்.
4. உணவுபங்கீடு அட்டை (அ) இருப்பிட சான்றிதழ்.
5. ஆதார் அட்டை.
6. திட்ட அறிக்கை.
7. வங்கிகள் கோரும் தேவையான ஆவணங்கள்
விண்ணப்பிக்கும் முறை:-
கடன் விண்ணப்ப படிவங்கள் பின்வரும் அலுவலகங்களில் கிடைக்கும்.
1. மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்திலுள்ள மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் நல அலுவலகம்/மாவட்ட சிறுபான்மையினர் அலுவலகம்.
2. மண்டல கூட்டுறவுசங்கங்களின் இணைப்பதிவாளர் அலுவலகங்கள்.
3. மாவட்ட/மத்திய கூட்டுறவு வங்கி அல்லது அதன் கிளைகள் அல்லது நகர கூட்டுறவு வங்கி அல்லதுதொடக்கவேளாண்மைகூட்டுறவு வங்கி.
திட்டம்-1
ஆண்டு வருமானம் கிராமப் புறங்கள் மற்றும் நகர்ப்புறங்களில் ரூ.3,00,000/-க்கு மிகாது இருத்தல் வேண்டும்.
அதிகபட்ச கடன் ரூ.20.00 இலட்சம்
வட்டி விகிதம் ஆண்களுக்கு ஆண்டிற்கு 6%
வட்டி விகிதம் பெண்களுக்கு ஆண்டிற்கு 6%
கடனை திருப்பி செலுத்தும் காலம்:- அதிகபட்சம் 5 ஆண்டுகள்..
திட்டம்-2
திட்டம் 1 இன் கீழ் நன்மை பெற முடியாத நபர்கள் மற்றும் ரூ.8,00,000/ வரை ஆண்டு வருமானம் கொண்டவர்கள் (கிராமபுறம் மற்றும் நகர்புறங்களுக்கு
அதிகபட்ச கடன் ரூ.30.00 இலட்சம்
வட்டி விகிதம் ஆண்களுக்கு ஆண்டிற்கு 8%
வட்டி விகிதம் பெண்களுக்கு ஆண்டிற்கு 6%
கடனை திருப்பி செலுத்தும் காலம்:- அதிகபட்சம் 5 ஆண்டுகள்
அட்மின் மீடியா செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள
Follow as on google news :- CLICK HERE
follow us on twitter :- CLICK HERE
Follow us on Facebook :- CLICK HERE
Follow us on telegram :- CLICK HERE
Follow us on whatsapp channel :- CLICK HERE
Follow as on Instagram :- CLICK HERE
download our app play store :- CLICK HERE
Tags: தமிழக செய்திகள் தொழில் வாய்ப்பு மார்க்க செய்தி