Breaking News

தமிழகத்தில் உள்ள பள்ளிவாசல்கள் , தொழுகை நேரம் தெரிந்து கொள்ள ஆப் அறிமுகப்படுத்திய ஜமா அத்துல் உலமா சபை முழு விவரம் way 2 masjid app

அட்மின் மீடியா
0
தமிழகத்தில் உள்ள பள்ளிவாசல்கள் , தொழுகை நேரம் தெரிந்து கொள்ள ஆப் அறிமுகப்படுத்திய ஜமா அத்துல் உலமா சபை முழு விவரம் way 2 masjid app Find Nearest Masjid with Exact Time of Salath


ஜமா அத்துல் உலமா சபை அறிவிப்பு பார்க்க:-

கண்ணியமிகு மஸ்ஜிதுகளின் தலைவர் செயலாளர் பொருளாளர் உள்ளிட்ட நிர்வாகப் பெருமக்களுக்கு அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்...

அன்பிற்கினிய இஸ்லாமிய சகோதரர்கள் உள்ளூர் மற்றும் வெளியூர் எங்கிருந்தாலும் தங்கள் தொழுகைகளை ஜமாஅத்துடன் நிறைவேற்றுவதற்கு உதவி செய்கின்ற விதத்தில் கடந்த ஐந்து வருட கடின உழைப்பிற்குப் பின் Way 2 Masjid App (வே டு மஸ்ஜித் செயலி) உருவாக்கப்பட்டு அல்லாஹ்வின் பேரருளால் 25.02.2025 முதல் பொதுமக்களின் பயன்பாட்டிற்காக வெளியிடப்படுகிறது என்பதை மகிழ்வுடன் தெரிவித்துக்கொள்கிறோம்.

இதன் மூலம் நம் மஹல்லா பள்ளியின் தொழுகை நேரங்கள் மாறும் போதெல்லாம் நமக்கு தகவல் கிடைக்கின்ற விதத்திலும் பயணத்தில் இருக்கின்ற பொழுது அருகிலுள்ள மஸ்ஜிதுகள் அதன் தொழுகை நேரங்கள் மற்றும் அதற்குச் செல்லும் வழி ஆகியவற்றை மிகத் தெளிவுபடுத்தும் செயலியே இது.


https://www.adminmedia.in/2025/02/free-sahar-food-at-tamilnadu-free-sahar.html

அல்லாஹ்வின் பேரருளால் இச்செயலியில் தற்போது ஏறக்குறைய தமிழகத்தில் உள்ள மூன்று ஆயிரம் மஸ்ஜிதுகள் இணைக்கப்பட்டுள்ளன.

இதுவரை எந்த மஸ்ஜிதுகள் இணைக்கப்பட்டுள்ளனவோ அவை ஒவ்வொன்றுக்கும் தனித்தனி QR Code வழங்கப்படுகிறது. தங்கள் மஸ்ஜிதிற்குரிய QR கோடு உள்ளிட்ட விவரங்கள் இன்ஷா அல்லாஹ் தங்களுக்கு வழங்கப்படும். அதை பொதுமக்களின் பார்வையில் படும் விதத்தில் தங்களின் அறிவிப்பு பலகை உள்ளிட்ட இடங்களில் ஒட்டி பொதுமக்கள் இதனை பதிவேற்றம் செய்து கொள்வதற்கு உதவிடுமாறு மிகுந்த அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.


ஒருவேளை இதுவரை தங்களுடைய மஸ்ஜித் பதிவு செய்யப்பட வில்லையானால் தங்களின் இமாமின் வழியாக Way 2 Masjid App (வே டு மஸ்ஜித் செயலி)யின் மாவட்ட (https://way2masjid.com/imam-support) தங்களின் மஸ்ஜிதை இணைக்குமாறு கேட்டுக்கொள்கிறோம்.

குறிப்பு: கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கின் மூலம் பொதுமக்களின் பயன்பாட்டிற்கான Way 2 Masjid App-னை பதிவிறக்கம் செய்து கொள்ளுங்கள்.

ஆப் இன்ஸ்டால் செய்ய இங்கு கிளிக் செய்யவும்:-

https://play.google.com/store/apps/details?id=com.way2masjid.user

Tags: மார்க்க செய்தி

Give Us Your Feedback