1 முறை சார்ஜ் செய்தால் 50 ஆண்டுகள் வரை நீடிக்கும் நியூகிளியர் பேட்டரியை கண்டுபிடித்த சீனா! nuclear battery 50 years without charging
1 முறை சார்ஜ் செய்தால் 50 ஆண்டுகள் வரை நீடிக்கும் நியூகிளியர் பேட்டரியை கண்டுபிடித்த சீனா! nuclear battery 50 years without charging
சீனாவின் பீட்டாவோல்ட் (Betavolt) என்ற ஸ்டார்ட் அப் நிறுவனம் அணுக்கரு மின்கலத்தை (Nuclear Battery) கண்டுபிடித்துள்ளது. இது 50 வருடங்களுக்கு மின்சாரம் வழங்கும் திறன் கொண்டதாகும்.இந்த பேட்டரி ஒரு நாணயத்தைவிட சிறியதாகும். இது செல்போன்கள், டிரோன்கள், பேஸ்மேக்கர்கள் மற்றும் சென்சார்கள் போன்ற சிறிய மின்னணு சாதனங்களுக்கு சக்தியளிக்க உதவும் என்று கூறப்படுகிறது.
50 ஆண்டுகளுக்கு ஒருமுறை பேட்டரி ரீசார்ஜ் என்பது பீட்டாவோல்ட் என்ற சீன நிறுவனத்தால் தற்போது உருவாக்கப்பட்டு வரும் ஒரு பேட்டரி தொழில்நுட்பத்தைக் குறிக்கிறது.
இது ரீசார்ஜ் செய்யாமல் 50 ஆண்டுகள் வரை மின்சாரம் வழங்கும் திறன் கொண்ட ஒரு அணுசக்தி பேட்டரியை உற்பத்தி செய்வதாகக் கூறுகிறது.
வழக்கமாக ஸ்மார்ட்போன்களில் லித்தியம் பேட்டரி தான் பயன்படுத்தப் படுகிறது. ஆனால், இது உலகின் முதல் நியூக்ளியர் பேட்டரியாகும். அணுசக்தி பேட்டரி என்றும் சொல்லப்படுகிறது
உலகின் முதல் மினியேட்டரைஸ் செய்யப்பட்ட அணுசக்தி அமைப்பு (world’s first miniaturized atomic energy system) என்று இந்த பேட்டரி புகழப்படுகிறது.
இது அடிப்படையில் பெரும்பாலான மின்னணு சாதனங்களின் முழு ஆயுட்காலத்தையும் ரீசார்ஜ் சுழற்சி இல்லாமல் நீடிக்கும்
இந்த பேட்டரி ஒரு நாணயத்தை விட சிறியது மற்றும் நிக்கலின் (நிக்கல்-63) கதிரியக்க ஐசோடோப்பை அதன் சக்தி மூலமாகப் பயன்படுத்துகிறது.
ஒரு நாணயத்தின் அளவை விட மிகச் சிறியதாக உள்ள இந்த battery BV100 என்று அழைக்கப்படுகிறது.
இது, 100 மைக்ரோவாட் மற்றும் 3 வோல்ட்ஆற்றலுடன் 120 முதல் மைனஸ் 60 டிகிரி செல்சியஸ் வரையிலான வெப்பநிலையைத் தாங்கக்கூடிய சிறிய 15 x 15 x 5 மில்லிமீட்டர் அளவிலான மிக சிறிய பேட்டரியாகும்.
Tags: தொழில்நுட்பம்