Breaking News

16 ஆண்டுகளாக உணவு உண்ணாமல், தண்ணீர் குடிக்காமல் உயிர் வாழும் அதிசய பெண் உண்மை என்ன முழு விவரம் muluwork ambaw She Hasn't Eaten in 16 Years No Food, No Water

அட்மின் மீடியா
0
16 ஆண்டுகளாக உணவு உண்ணாமல், தண்ணீர் குடிக்காமல் உயிர் வாழும் அதிசய பெண் உண்மை என்ன முழு விவரம் muluwork ambaw


எத்தியோப்பியாவில் உள்ள அமெயா என்ற சிறிய கிராமத்தில்தான்  இந்தப் பெண் வாழ்ந்து வருகிறார். அவர் பெயர் முலுவொர்க் அம்பாவ். இவர் 10 வயதாக இருக்கும்போது  சாப்பாடு சாப்பிட்டுள்ளார். அதுதான் அவர் கடைசியாக உண்ட சோறு. அதற்கு அப்புறம் அவருக்குப் பசியே எடுக்கவில்லை. தண்ணீர் தாகம் கூட ஏற்படவில்லை. அவர் சாப்பிடவில்லை என்பது ஆச்சரியம் என்றால், அவர் இந்த 16 ஆண்டுகளாகச் சிறுநீர் மற்றும் மலம் கழிக்கவோ வேண்டிய தேவை ஏற்படவே இல்லை. இதனால் இவர் கின்னஸ் சாதனை நிகழ்த்தியுள்ளார் என பல ஆண்டுகளாக செய்தி பரவுகின்றது

கின்னஸ் சாதனை:-

ஸ்காட்லாந்தை சேர்ந்த Angus Barbieri அங்கஸ் பார்பீரி  என்பவர் திட உணவு இல்லாமல் ஒருவர் நீண்ட காலம் 382 நாட்கள் வாழ்ந்தார், அவரது எடை 214 கிலோ (33 ஸ்டண்ட் 10 பவுண்ட்) இலிருந்து 80.74 கிலோ (12 ஸ்டண்ட் 10 பவுண்ட்) ஆகக் குறைந்தது. இவர் ஜூன் 1965 முதல் ஜூலை 1966 வரை ஆங்கஸின் டண்டீயில் உள்ள மேரிஃபீல்ட் மருத்துவமனையில் தேநீர், காபி, தண்ணீர், சோடா நீர் மற்றும் வைட்டமின்களை உட்கொண்டு வாழ்ந்துளார். என கின்னஸ் சாதனை பக்கத்தில் செய்தி வெளியிட்டுள்ளார்கள் பார்க்க 

https://www.guinnessworldrecords.com/world-records/78789-longest-survival-without-food

ஆனால் 16 ஆண்டுகளாக உணவு உண்ணாமல், தண்ணீர் குடிக்காமல் உயிர் வாழும் அதிசய பெண் முலுவொர்க் அம்பாவ் பற்றி கின்னஸ் சாதனை பக்கத்தில் நாம் தேடிய வரையில் செய்தி எதுவும் கிடைக்கவில்லை

muluwork ambaw She Hasn't Eaten in 16 Years No Food, No Water :-

முலுவொர்க் அம்பாவ், 10 வயதிலிருந்து 16 வருடங்களாக உணவு மற்றும் தண்ணீர் எதுவும் உட்கொள்ளாமல் வாழ்வதாகக் கூறுகிறார், இயற்கையின் விதிகளை மீறும் தனது அற்புதமான திறனுக்கு அம்பாவ் எந்த விளக்கமும் அளிக்கவில்லை, அது கடவுளின் விருப்பமாக இருக்க வேண்டும் என்று கூறுகிறார் 

முலுவொர்க் அம்பாவ், தான் எத்தியோப்பியாவைச் சேர்ந்தவர் என்றும், 2010 ஆம் ஆண்டு முதல் சாப்பிடவும், குடிக்கவும் இல்லை என்றும் கூறுகிறார். 10 வயதில் பசியை மறந்துவிட்டதாகவும், 16 ஆண்டுகளாக ஆரோக்கியமாக தனது அன்றாட வாழ்க்கையை நடத்தி வருவதாகவும் அவர் கூறுகிறார் என செய்திகள் இணையத்தில் கொட்டி கிடக்கின்றன.

இவருக்கு 10 வயதாக இருக்கும்போது ஒருநாள் சிகப்பு பருப்பு குழம்பைப் போட்டு சாப்பாடு சாப்பிட்டுள்ளார். அதுதான் அவர் கடைசியாக சாப்பிட்ட சாப்பாடு. அதற்கு அப்புறம் அவருக்குப் பசியே எடுக்கவில்லை. தண்ணீர் தாகம் கூட ஏற்படவில்லை என்றால் நம்புவீர்களா? வேறு வழியே இல்லை நம்பியே ஆகவேண்டும்.

இதனை அறிந்து அவரை தேடிச் சென்று சந்தித்திருக்கிறார் உலக புகழ்பெற்ற டிரு பின்ஸ்கி என்ற யூடியூபர். அந்தக் கிராமத்தில் உள்ள மக்கள் அனைவரும் அந்தச் செய்தியை உறுதிப்படுத்தி இருக்கிறார்.

அட்மின் மீடியா செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள 

Follow as on google news             :- CLICK HERE 

follow us on twitter                       :- CLICK HERE 

Follow us on Facebook                 :- CLICK HERE 

Follow us on telegram                  :- CLICK HERE 

Follow us on whatsapp channel   :- CLICK HERE 

Follow as on Instagram                :- CLICK HERE 

download our app play store        :- CLICK HERE

Tags: வெளிநாட்டு செய்திகள் வைரல் வீடியோ

Give Us Your Feedback