Breaking News

தமிழக வெற்றிக்கழகத்தின் பொதுக்குழுவில் நிறைவேற்றப்பட்ட 17 தீர்மானங்கள் முழு விவரம்

அட்மின் மீடியா
0

தமிழக வெற்றிக்கழக்கத்தின் பொதுக்குழுவில் நிறைவேற்றப்பட்ட 17 தீர்மானங்கள் முழு விவரம்



தமிழக வெற்றிக் கழக முதல் பொதுக்குழு கூட்டத்தில் 17 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதில்

வஃக்பு சட்டத்திருத்த மசோதாவிற்கு எதிராக தீர்மானம்.

இருமொழி கொள்கையில் உறுதி.

பரந்தூரில் புதிய விமான நிலையம் அமைக்கக் கூடாது.

சமூக நீதியை நிலைநிறுத்த, ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்த வேண்டும்.

டாஸ்மாக்கின் ஆயிரம் கோடி ரூபாய் முறைகேடு விவகாரத்தில் உரிய விசாரணை நடத்தப்பட வேண்டும்.

மீனவர் போராட்டத்திற்கு ஆதரவு மற்றும் அவர்களின் பிரச்சினைகளுக்கு நிரந்தரத் தீர்வு எட்டப்பட வேண்டும்.

நாடாளுமன்றத் தொகுதி மறுசீரமைப்பு தேவையில்லை.பன்னாட்டு அரங்கிற்குத் தந்தை பெரியார் பெயரைச் சூட்டவேண்டும்.

கொள்கைத் தலைவர்களின் வழியில் பயணிப்போம்.

மாநில அரசுகளுக்கு அதிகாரங்கள் பகிர்ந்தளிக்கப்பட வேண்டும்.

அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் மற்றும் பணியாளர்களை நம்ப வைத்து ஏமாற்ற வேண்டாம்.

சட்டம் ஒழுங்கு சீர்கேட்டுக்குக் காரணமான தி.மு.க. அரசுக்குக் கண்டனம்.

பாலியல் வன்கொடுமை வழக்குகளை விசாரிக்க, சிறப்பு விரைவு நீதிமன்றங்கள் தேவை.

இலங்கைத் தமிழர் பிரச்சினைக்குப் பொது வாக்கெடுப்பு நடத்த வேண்டும்.

தேர்தல் கூட்டணி நிலைப்பாடு - தலைவர் விஜய்க்கே முழு அதிகாரம்.புதிய நிர்வாகிகளுக்கு வாழ்த்துகளும் பாராட்டுகளும்

Tags: அரசியல் செய்திகள்

Give Us Your Feedback