2030 ம் ஆண்டு ஒரே வருஷத்துல 2 ரமலான் கொண்டாட்டம் முழு விவரம் Ramadan will be observed twice in the year 2030
2030 ம் ஆண்டு ஒரே வருஷத்துல 2 ரமலான் கொண்டாட்டம் முழு விவரம் Ramadan will be observed twice in the year 2030
2030 ஆம் ஆண்டில் 2 முறை ரம்ஜான் பண்டிகை வர உள்ளதாக கணிப்பு; 2030ம் ஆண்டின் ஜனவரி மாத தொடக்கத்தில் ஒரு ரம்ஜானும், டிசம்பர் மாதக் கடைசியில் ஒரு ரம்ஜானும் வர உள்ளது
இதற்குக் காரணம், சந்திர சுழற்சிகளை அடிப்படையாகக் கொண்ட ஹிஜ்ரி நாட்காட்டிக்கும், பூமி சூரியனைச் சுற்றி வருவதைக் குறிக்கும் ஜார்ஜிய நாட்காட்டிக்கும் இடையே உள்ள வேறுபாடுதான்.சந்திர நாட்காட்டி சூரிய நாட்காட்டியை விட 11 நாட்கள் குறைவாக இருப்பதால், இந்த நிகழ்வு தோராயமாக 30 ஆண்டுகளுக்கு ஒருமுறை நிகழ்கிறது என்று வானியலாளர் விளக்கியுள்ளார்கள்
இதேபோல் கடைசியாக கடந்த 1997 மற்றும் அதற்கு முன்பு 1965ம் ஆண்டு இதேபோன்று ஒரே வருடத்தில் 2 ரம்ஜான் பண்டிகை கொண்டாடப்பட்டது குறிப்பிடத்தக்கது.
timeanddate.com என்ற இணையதளத்தில் உள்ள 2030 ஆம் ஆண்டுக்கான நாட்காட்டின்படி, ஜனவரி 6 ஆம் தேதி ரமலான் நோன்பு ஆரம்பமாகும் எனவும் பிப்ரவரி 5 ஆம் தேதி ஈத் அல் பித்ர் பண்டிகையும் கொண்டாப்படும் என்று விளக்கப்பட்டுள்ளது.
அதேபோல் 2030 ம் ஆண்டின் இறுதிக்குள், டிசம்பர் 26 ஆம் தேதி மீண்டும் ரமலான் நோன்பு ஆரம்பமாகும் என கணிக்கப்பட்டுள்ளது
Tags: மார்க்க செய்தி