உத்தராகண்ட் மாநிலத்தில் ஏற்பட்ட பனிச்சரிவு 4 பேர் பலி - 50 பேர் மீட்பு வீடியோ
உத்தராகண்ட் மாநிலத்தில் ஏற்பட்ட பனிச்சரிவு 4 பேர் பலி - 50 பேர் மீட்பு வீடியோ
உத்தராகண்ட்டின் சாமோலி மாவட்டத்தில் உள்ள உயரமான மனா கிராமத்தில் உள்ள எல்லை சாலைகள் அமைப்பின் முகாமில் வெள்ளிக்கிழமை காலை 5.30 மணி முதல் 6 மணிக்குள் ஏற்பட்ட பனிச்சரிவில் 55 தொழிலாளர்கள் சிக்கிய நிலையில், அவர்களில் 50 பேர் மீட்கப்பட்டனர். மீட்கப்பட்டவர்களில் 4 பேர் உயிரிழந்துவிட்டது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. மீதமுள்ள 5 பேரை தேடும் பணி நடைபெற்று வருகிறது என்று ராணுவ செய்தித் தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.
உத்தராகண்ட் மாநிலம் பத்ரிநாத் கோயிலில் இருந்து 3 கிலோமீட்டர் தூரத்தில் உள்ள மனா கிராமத்தில் நேற்று கடுமையான பனிச்சரிவு ஏற்பட்டது. எல்லை சாலைகள் அமைப்பு (பிஆர்ஓ) முகாமுக்கு அருகே இந்த பனிச்சரிவு ஏற்பட்டதால் அங்கு சாலை கட்டுமானத்தில் ஈடுபட்டிருந்த தொழிலாளர்கள் பலர் சிக்கி கொண்டனர். அவர்கள் தங்கியிருந்த வீடுகளும் பனிச்சரிவால் மூடப்பட்டன.
இத்தொழிலாளா்கள் அனைவரும் திபெத் எல்லையை நோக்கிய ராணுவப் போக்குவரத்துக்காக சாலையில் பனியை அப்புறப்படுத்தும் பணியில் ஈடுபட்டு வந்தவா்களாவா்.
பனிச்சரிவைத் தொடா்ந்து, ராணுவம், இந்திய-திபெத் எல்லைக் காவல் படை (ஐடிபிபி) மற்றும் பிற துறைகளின் தரப்பில் மீட்புப் பணி உடனடியாகத் தொடங்கப்பட்டது.உயரமான பகுதிகளில் மீட்புப் பணியில் ஈடுபட பயிற்சி பெற்ற ராணுவத்தின் ‘ஐபெக்ஸ்’ படைப் பிரிவினா் களமிறக்கப்பட்டு மீட்டுப் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
வீடியோ பார்க்க இங்கு கிளிக் செய்யவும்:-
https://x.com/DDNewslive/status/1895810392682840308
Tags: இந்திய செய்திகள்