Breaking News

கன்னியாகுமரி மாவட்டத்தில் புனித அந்தோனியார் ஆலய விழாவில் மின்சாரம் பாய்ந்து 4 பேர் உயிரிழப்பு!

அட்மின் மீடியா
0

கன்னியாகுமரி மாவட்டம் தேங்காபட்டணம் பகுதியில் இனயம் புத்தன்துறை என்ற மீனவ கிராமம் உள்ளது. இங்குள்ள அந்தோணியார் தேவாலயத்தில் திருவிழா நடைபெற்று வருகிறது. திருவிழாவின் முக்கிய நிகழ்வான தேர்பவனி நாளை (மார்ச் 2) நடைபெறவுள்ள நிலையில், தேர் செல்லும் பகுதிகளில் தேர் செல்ல தடையாக உள்ள பொருட்களை அகற்றும் பணியும், அலங்காரம் மேற்கொள்ளும் பணியும் இன்று நடைபெற்றது.



அப்போது, சிலர் இரும்பு ஏணி ஒன்றை இனையம் புத்தன்துறையை சேர்ந்த மீனவர்களான விஜயன் (52), ஜங்டஸ்(35), சோபன் (45), மதன்(45) ஆகிய 4 பேர் எடுத்து கொண்டு சென்றபோது, அது மின்கம்பம் மீது உரசியுள்ளது.இந்த சம்பவத்தில் 4 பேர் அந்த இடத்திலேயே பலியானார்கள். 

அவர்களின் உடல்களை போலீசார் கைப்பற்றி குழித்துறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். இந்த விபத்து பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர். உயிரிழந்த 4 பேரும் பின்றோ, மரிய விஜயன், அருள் சோபன், ஜஸ்டஸ் என அடையாளம் காணப்பட்டு உள்ளது

வீடியோ பார்க்க இங்கு கிளிக் செய்யவும்:-

https://x.com/adminmedia1/status/1895879793754984672

Tags: தமிழக செய்திகள்

Give Us Your Feedback