Breaking News

பாஸ்போட்டில் 4 முக்கிய அதிரடி மாற்றம் செய்த மத்திய அரசு - இனி பாஸ்போர்ட்டில் இந்த தகவல் எல்லாம் இருக்காது முழு விபரம்

அட்மின் மீடியா
0
பாஸ்போட்டில் 4 முக்கிய அதிரடி மாற்றம் செய்த மத்திய அரசு இனி பாஸ்போர்ட்டில் இந்த தகவல் எல்லாம் இருக்காது முழு விபரம்


பாஸ்போர்ட் விண்ணப்பிப்பதற்கு புதிய விதிகளை மத்திய அரசு கொண்டுவந்துள்ளது. மத்திய அரசு கொண்டு வந்துள்ள 4 முக்கிய மாற்றங்கள் என்ன என்ன என்பதை பற்றி இங்கு தெரிந்து கொள்வோம்.

முதல் மாற்றம்:- பெற்றோர் பெயர்:-

பாஸ்போர்ட்டின் கடைசி பக்கத்தில் பெற்றோர் பெயர் அச்சிடப்பட்டு வருகிறது. இனி பெற்றோர் பெயர் அச்சிடப்படாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இரண்டாம் மாற்றம் :- முகவரி மாற்றம்:-

இதுவரை பாஸ்போர்ட்களில் முகவரி கடைசி பக்கத்தில் அச்சிடப்பட்டு வந்தது. பாஸ்போர்ட் வைத்திருப்பவர்களின் பாதுகாப்பு நலன் கருதி இந்த முறை தற்போது கைவிடப்படுகிறது. அதற்கு பதிலாக, முகவரி விவரங்கள் பார்கோடில் (Barcode) பதியப்படும், இது தேவையானபோது குடிவரவு (Immigration) அதிகாரிகளால் மட்டும் ஸ்கேன் செய்துக்கொள்ளும் வகையில் வடிவமைக்கப்படுகிறது.

மூன்றாம் மாற்றம்:- வண்ண பாஸ்போர்ட்:-

அரசு அதிகாரிகளுக்கு: வெள்ளை நிற பாஸ்போர்ட் வழங்கப்படும்

வெளிநாட்டு தூதர்களுக்கு சிவப்பு நிற பாஸ்போர்ட் வழங்கப்படும்

சாதாரண குடிமக்களுக்கு: முந்தையபோல் நீலம் நிற பாஸ்போர்ட் வழங்கப்படும்.

நான்காம் மாற்றம்:- பிறப்புச் சான்றிதழ் கட்டாயம்:-

அக்டோபர் 1, 2023 முதல் பிறந்த அனைவருக்கும் பாஸ்போர்ட் விண்ணப்பிக்கும்போது உள்ளாட்சி/நகராட்சி/ மாநகராட்சியில் பிறப்பு மற்றும் இறப்புப் பதிவாளர் வழங்கிய பிறப்புச் சான்றிதழ் கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

Tags: முக்கிய செய்தி

Give Us Your Feedback