7,535 ஆசிரியர் பணியிடங்கள் நிரப்பப்படும் - ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவிப்பு annual planner 2025 trb
7,535 ஆசிரியர் பணியிடங்கள் நிரப்பப்படும் - ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவிப்பு
தமிழ்நாட்டில் இந்த 2025 ம் ஆண்டு 7,535 ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர்கள் இல்லாத பணியிடங்களுக்கு நியமனம் செய்யப்படவுள்ளதாக ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்துள்ளது.
தமிழ்நாட்டில் ஆசிரியர் பணி தொடர்பான காலி பணியிடங்களுக்கு தற்காலிக annual planner அட்டவணையை ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிட்டுள்ளது.
அதில், ஆசிரியர் மற்றும் ஆசிரியர் அல்லாத பணியிடங்களுக்கான அறிவிப்புகள், தேர்வுகள், தேர்வு தேதிகள் அறிவிக்கப்பட்டுள்ளன.
அந்த வகையில், அண்ணா பல்கலைக்கழகத்தில் உதவிப் பேராசிரியர், உதவி நூலகர் மற்றும் உடற்கல்வி உதவி இயக்குநர் பணியிடங்களுக்கு 232 பேரை தேர்ந்தெடுக்க, ஏற்கனவே அறிவித்தது போல், வரும் ஏப்ரல் மாதம் தேர்வு நடத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
சட்ட பேராசிரியர்கள், உதவி பேராசிரியர்கள் உள்ளிட்ட பணிகளில் காலியாக உள்ள 132 இடங்களுக்கு வரும் மே மாதமும், அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் காலியாக உள்ள 4,000 உதவிப் பேராசிரியர் பணியிடங்களுக்கு வரும் ஜூலை மாதமும் தேர்வு நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
More Details Click Here
https://trb.tn.gov.in/admin/pdf/6287721465website%20copy.pdf
Tags: தமிழக செய்திகள் வேலைவாய்ப்பு