7 பேரூராட்சிகளை நகராட்சிகளாக தரம் உயர்த்தி அரசாணை வெளியீடு
7 பேரூராட்சிகளை நகராட்சிகளாக தரம் உயர்த்தி தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.
நிர்வாக வசதி உள்ளிட்ட காரணங்களாக ஊராட்சிகளை பேரூராட்சிகளாகவும், பேரூராட்சிகளை நகராட்சிகளாகவும், நகராட்சிகளை மாநகராட்சிகளாகவும் மாற்றப்பட்டு வருகின்றன. இந்த நிலையில், தமிழகத்தில் கன்னியாகுமரி, அவினாசி உள்ளிட்ட 7 பேரூராட்சிகளை நகராட்சிகளாக தரம் உயர்த்தி தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.
திருவண்ணாமலை மாவட்டம் போளூர்,
செங்கம்,
கன்னியாகுமரி,
சேலம் மாவட்டம் சங்ககிரி,
நீலகிரி மாவட்டம் கோத்தகிரி,
திருப்பூர் மாவட்டம் அவினாசி,
ஈரோடு மாவட்டம் பெருந்துறை
மேற்குறிப்பிட்ட 7 பேரூராட்சிகளை நகராட்சிகளாக தரம் உயர்த்தி தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.
polur Town Panchayat
Chengam Town Panchayat
Kanniyakumari Town Panchayat
Sankagiri Town Panchayat
Kothagiri Town Panchayat
Avinashi Town Panchayat
Perundurai Town Panchayat
Tags: தமிழக செய்திகள்