அகிலேஷ் யாதவ் மீது செருப்பு வீச்சு என பரவும் வீடியோ உண்மை என்ன முழு விவ்ரம் இதோ akhilesh yadav chappal video
அட்மின் மீடியா
0
பரவிய செய்தி:-
உத்தரப் பிரதேசத்தின் சோரனில் நடந்த ஒரு கூட்டத்தில், அகிலேஷ் யாதவ், "மத்தியில் தங்கள் கூட்டணி ஆட்சிக்கு வந்தால், அயோத்தியில் உள்ள ராமர் கோயிலைப் பூட்டி விடுவோம்" என்று கூறினார்.
உடனே, அங்கு கூடியிருந்த அவருடைய கட்சியை சேர்ந்த கூட்டமே அவர் மீது செருப்புகளை வீசி சரமாரியாக தாக்கியது. 👡 🩴 இந்த ஆவேசம் தான் இந்துக்களுக்கு வேண்டும் என்று கூறுகிறோம். சபாஷ் !! 👍👌👍👌
உண்மை என்ன:-
பலரும் ஷேர் செய்யும் அந்த வீடியோ உண்மையான வீடியோதான்
ஆனால் அந்த வீடியோவில் அவர் மீது செருப்புகள் வீசப்படவில்லை, அகிலேஷ் யாதவ் மீது பூக்கள் மற்றும் மாலைகள் தான் வீசப்படுகின்றது. அதனை செருப்பு என்றும் அதற்க்கு ஒரு பொய்யாக கதையும் கட்டி வதந்தி பரப்புகின்றார்கள்
வீடியோவின் முழு விவரம்:-
உத்தரபிரதேச மாநிலத்தில் உள்ள சமாஜ்வாடி கட்சியின் தேசியத் தலைவரும் உத்தரபிரதேச முன்னாள் முதல்வர் அகிலேஷ் யாதவ் கடந்த 2024 மக்களவைத் தேர்தல் பிரச்சாரத்தில் கன்னோஜ் மாவட்டத்தில் கடந்த ஏப்ரல் 27, 2024 அன்று நடந்த தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தின் ஒன்றிலிருந்து எடுக்கப்பட்டது ஆகும். அப்போது அகிலேஷ் யாதவ் மீது பூக்கள் மற்றும் மாலைகளை மக்கள் வீசி ம் மக்கள் வீடியோ, அவர் மீது காலணிகளை வீசுவதாக தவறாகப் பகிரப்படுகிறது
அட்மின் மீடியா ஆதாரம் பார்க்க இங்கு கிளிக் செய்யவும்:-
https://www.youtube.com/watch?v=0b8ocLqCI3M
Tags: FACT CHECK மார்க்க செய்தி