Breaking News

ரமலான் அன்று வங்கிகள், எல்.ஐ.சி , வருமான வரி அலுவலங்கங்களுக்கு விடுமுறை இல்லை முழு விவரம்

அட்மின் மீடியா
0

ரமலான் அன்று அனைத்து வங்கிகளுக்கு விடுமுறை இல்லை - ரிசர்வ் வங்கி உத்தரவு

மார்ச் 31 அன்று வங்கிகள் கட்டாயமாக கிளியரிங் செயல்பாட்டில் பங்கேற்க வேண்டும் என இந்திய ரிசர்வ் வங்கி உத்தரவு பிறப்பித்துள்ளது.

இஸ்லாமிய பண்டிகையான ரம்ஜான் இந்த ஆண்டு வரும் 31ம் தேதி கொண்டாடப்படுகிறது. அரசு விடுமுறை தினமாக அறிவிக்கப்பட்ட இந்த தினம், நடப்பு நிதியாண்டின் கடைசி நாள் என்பதால் அனைத்து வங்கிகளும் செயல்பட வேண்டும் என்று ரிசர்வ் வங்கி உத்தரவிட்டுள்ளது. அதன்படி, அனைத்து வங்கிகளும் வழக்கமான வேலை நாளாகவும், அரசு பரிவர்த்தனை செயல்பாடுகளுக்காகவும் திறந்திருக்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.

வரி செலுத்துவோருக்கு அதிக வசதியை வழங்கும் நோக்கில், அரசு வணிகங்களைக் கையாளும் முகமை வங்கிகளின் கிளைகளை மார்ச் 31, 2025 அன்று (திங்கள்-பொது விடுமுறை) பரிவர்த்தனைகளுக்காகத் திறந்து வைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது" என்று ரிசர்வ் வங்கி சுற்றறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

எனவே இந்த ஆண்டு மார்ச் 31ஆம் தேதி ரம்ஜான் நாளாக இருந்தாலும் வங்கிகளுக்கு விடுமுறை அல்ல என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

இமாச்சலப் பிரதேசம் மற்றும் மிசோரம் தவிர, ரம்ஜான் பண்டிகைக்கு (ஈத்-உல்-பித்ர்) வங்கிகள் மூடப்பட வேண்டும். புதிய உத்தரவு, மார்ச் 31 நிதியாண்டின் முடிவைக் குறிக்கும் என்பதால், நிதி மூடல்களை தடையின்றி செயலாக்குவதை உறுதி செய்கிறது, இதனால் கணக்குகளை இறுதி செய்தல் மற்றும் நிதிநிலை அறிக்கைகள் போன்ற வங்கி நடவடிக்கைகள் அதிகரிக்கப்படுகின்றன.

எல்.ஐ.சி அலுவலகங்கள்:-

அதேபோல் பாலிசிதாரர்கள் எந்தவிதமான சிரமத்தையும் சந்திக்காமல் இருப்பதை உறுதி செய்வதற்காக, மார்ச் 29, 30 மற்றும் 31 ஆகிய தேதிகளில் காப்பீட்டு நிறுவனங்கள் தங்கள் அலுவலகங்களை திறந்திருக்க வேண்டும் என்று இந்திய காப்பீட்டு ஒழுங்குமுறை மற்றும் மேம்பாட்டு ஆணையம் (IRDAI) அறிவுறுத்தியுள்ளது.

எனவே லைஃப் இன்சூரன்ஸ் கார்ப்பரேசன் தனது கிளைகள் வரும் வார இறுதி நாட்களான 29, 30 மற்றும் மார்ச் 31 (திங்கள்) அன்று திறந்திருக்குமென அறிவித்துள்ளது. 

வருமான வரி அலுவலகங்கள்:-

நிதியாண்டின் இறுதிக்கான வரி தொடர்பான பரிவர்த்தனைகளை வரி செலுத்துவோர் முடிக்க உதவும் வகையில், நாடு முழுவதும் உள்ள வருமான வரி அலுவலகங்கள் மார்ச் 29 முதல் மார்ச் 31 வரை திறந்திருக்கும் என்று வருமான வரித் துறை தெரிவித்துள்ளது .புதுப்பிக்கப்பட்ட வருமான வரிக் கணக்குகளைத் தாக்கல் செய்வதற்கான காலக்கெடு மார்ச் 31, 2025 என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும்.

Tags: இந்திய செய்திகள்

Give Us Your Feedback