Breaking News

திருமணம் செய்ய மறுத்த காதலனுக்கு எலி மருந்து கலந்து டீ கொடுத்த காதலி நடந்தது என்ன முழு விவரம்

அட்மின் மீடியா
0

திருமணம் செய்ய மறுத்த காதலனுக்கு எலி மருந்து கலந்து டீ கொடுத்த காதலி நடந்தது என்ன முழு விவரம்

விழுப்புரம் மாவட்டம் திருவெண்ணெய்நல்லூர் அருகே கீரிமேடு கிராமத்தைச் சேர்ந்தவர் ஏழுமலை மகன் ஜெயசூர்யா (25). இவர் ஆந்திராவில் உள்ள தனியார் சட்டக்கல்லூரியில் பயின்று வருகிறார். 

அதே கிராமத்தில் வசிக்கும் வெங்கடேசன் மகள் ரம்யா (19), தனியார் கல்லூரியில் இன்ஜினியரிங் படித்து வருகிறார்.இவர்கள் இருவரும் காதலித்து வந்த நிலையில் ஜெயசூர்யா ரம்யாவிடம் பேசாமல் இருந்து வந்துள்ளார். இதனிடையே கடந்த மாதம் 2ம் தேதி ரம்யா டீயில் எலி மருந்து கலந்து ஜெயசூர்யாவுக்கு கொடுத்ததாக கூறப்படுகிறது. 

இதில் ஜெயசூர்யா உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.இந்நிலையில் ஜெயசூர்யாவின் செல்போனுக்கு, ‘உன் உடம்பை பார்த்துக் கொள், முடிந்தால் உயிர் பிழைத்துக்கொள்…’ என்று ரம்யா மெசேஜ் அனுப்பி உள்ளார். இந்த மெசேஜ் தற்போது சமூக வலைதளங்களில் பரவி வருகிறது. இச்சம்பவம் குறித்து திருவெண்ணெய்நல்லூர் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags: தமிழக செய்திகள்

Give Us Your Feedback