கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்திற்கு புதியவர்கள் விண்ணப்பிக்கலாம்.. தமிழ்நாடு பட்ஜெட்டில் அசத்தல் அறிவிப்பு!
கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்திற்கு புதியவர்கள் விண்ணப்பிக்கலாம்.. தமிழ்நாடு பட்ஜெட்டில் அசத்தல் அறிவிப்பு!
கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தில் புதியவர்கள் விண்ணப்பிக்க வாய்ப்பு வழங்கப்படும் என தமிழ்நாடு பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது மேலும் இத்திட்டத்திற்கு ரூ.13,807 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
தமிழக பட்ஜெட்டில் அறிவித்த திட்டங்கள் என்ன முழு விவரம்
Tn Budget 2025
https://www.adminmedia.in/2025/03/tn-budget-2025.html
தமிழ்நாடு அரசு செயல்படுத்தும் கலைஞர் மகளிர் உரிமைத் தொகை (Kalaingar Magalir Urimai Thogai) திட்டம் மூலம் பெண்களுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் அவர்களின் வங்கிக் கணக்குகளில் நேரடியாக வரவு வைக்கப்படுகிறது.
இருப்பினும் கலைஞர் மகளிர் உரிமைத் தொகை விடுப்பட்டவர்கள் யாராக இருந்தாலும் உரிய தகுதிகள் இருந்தால் கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தில் சேர்த்துக் கொள்ளப்படுவார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது
ஏற்கனவே கலைஞர் மகளிர் உரிமைத் தொகைக்கு விண்ணப்பித்தவர்கள் உங்களின் விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டிருந்தால் மேல்முறையீடு செய்யவேண்டும். விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டதற்கான விளக்கம் அரசு சார்பில் வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில் கொடுக்கப்படும். அந்த காரணங்கள் தவறாக இருந்தால் உரிய ஆவணங்களை சமர்பித்து மேல்முறையீடு செய்து இந்த திட்டத்தில் சேர்ந்து கொள்ளலாம்.
புதிய விண்ணப்பதாரர்கள் அருகில் உள்ள இ சேவை மையங்களுக்கு சென்று விண்ணப்பிக்கலாம். ரேஷன் கார்டு, ஆதார் கார்டு, மொபைல் எண், வங்கி பாஸ்புக் நகல் மற்றும் பாஸ்போர்ட் சைஸ் புகைப்படம் ஆகியவற்றை கொடுக்க வேண்டும். வங்கி பாஸ்புக்கில் இருக்கும் மொபைல் எண்ணையே இந்த திட்டத்துக்கு விண்ணப்பிக்கும்போது அதிகாரப்பூர்வ மொபைல் எண்ணாக கொடுக்க வேண்டும்.
உங்கள் விண்ணப்பம் சரியாக இருந்தால் அதிகாரிகளால் சரிபார்க்கப்பட்டு விண்ணப்பம் ஏற்றுக் கொள்ளப்படும்.
Tags: அரசியல் செய்திகள் தமிழக செய்திகள்