Breaking News

உசிலம்பட்டி அருகே போலீஸ்காரர் அடித்து கொலை முழு விவரம்

அட்மின் மீடியா
0

உசிலம்பட்டி அருகே மதுக்கடையில் போலீஸ்காரர் அடித்து கொலை முழு விவரம்



டாஸ்மாக் கடையில் மது குடிக்கும்போது ஏற்பட்ட தகராறில் போலீஸ்காரர் அடித்துக் கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

உசிலம்பட்டி காவல் ஆய்வாளரின் ஓட்டுநரான, கள்ளபட்டியைச் சேர்ந்த முதல் நிலை போலீஸ்காரரான முத்துக்குமார் என்பவர் நேற்று பணி முடிந்து முத்தையன்பட்டியில் உள்ள டாஸ்மாக் கடையில் மது அருந்தும் போது, அங்கே மது அருந்திக் கொண்டிருந்த ஏற்க்கனவே  கஞ்சா வழக்கில் கைதாகி ஜமைனில் வந்தவர்களுக்கு அறிவுரை வழங்கியுள்ளார் பின் அங்கிருந்து வெளியே வந்த முத்துக்குமார், கள்ளபட்டியைச் சேர்ந்த ராஜாராம் என்பவருடன் அருகில் உள்ள தோட்டத்திற்கு வந்துள்ளார்.

அப்போது அடையாளம் தெரியாத சிலர், பின்னால் வந்து போலீஸ்காரரை கல்லால் தாக்கினர். தலையில் பலத்த காயம் அடைந்து சம்பவ இடத்திலேயே போலீஸ்காரரான முத்துக்குமார் உயிரிழந்தார். 

அவருடன் உடனிருந்த ராஜாராம் என்பவரும் இந்த தாக்குதலில் படுகாயமடைந்த நிலையில், உசிலம்பட்டி அரசு மருத்துவமனையில் அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

தகவலறிந்து விரைந்து வந்த மதுரை மாவட்ட எஸ்.பி. அரவிந்த் மற்றும் உசிலம்பட்டி டி.எஸ்.பி., சந்திரசேகரன் தலைமையிலான போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.\

Tags: தமிழக செய்திகள்

Give Us Your Feedback