Breaking News

ரமலான் அன்று சாலைகளில் தொழுகை மேற்கொண்டால் பாஸ்போர்ட், ஓட்டுநர் உரிமம் ரத்து - உத்திரபிரதேச காவல்துறை எச்சரிக்கை

அட்மின் மீடியா
0

சாலைகளில் தொழுகை மேற்கொண்டால் பாஸ்போர்ட், ஓட்டுநர் உரிமம் ரத்து - உத்திரபிரதேச காவல்துறை எச்சரிக்கை


ஈத்-உல்-பித்ர் மற்றும் ரம்ஜானின் கடைசி வெள்ளிக்கிழமை (மார்ச் 28) தொழுகைக்கு முன்னதாக, உத்தரபிரதேசத்தின் மீரட் காவல்துறை சாலைகளில் தொழுகை நடத்துவதற்கு எதிராக கடுமையான எச்சரிக்கைகளை விடுத்துள்ளது.மீறுபவர்கள் பாஸ்போர்ட் ரத்து செய்தல் மற்றும் ஓட்டுநர் உரிமம் ரத்து செய்தல் உள்ளிட்ட சட்ட விளைவுகளை சந்திக்க நேரிடும் என்று கூறியுள்ளது.

இது குறித்து மீரட் காவல்துறை வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்:-

சாலைகளில் பெரிய கூட்டம் தொழுகை நடத்தினால் அசம்பாவிதங்கள் ஏற்பட வாய்ப்புள்ளது. அதனால், மசூதிகள் மற்றும் ஈத்காக்களில் மட்டுமே தொழுகைகள் நடத்தப்பட வேண்டும். சாலைகளில் யாராவது தொழுகை செய்வதை கண்டறியப்பட்டால் அவர்கள் தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும். இந்த உத்தரவுகளை மீறுபவர்களின் பாஸ்போர்ட், ஓட்டுநர் உரிமை போன்றவை ரத்து செய்யப்படும். மேலும், அவர்கள் மெக்காவிற்கு புனித யாத்திரைக்கு செல்ல முடியாது’ எனத் தெரிவித்துள்ளது.

Tags: இந்திய செய்திகள் மார்க்க செய்தி

Give Us Your Feedback