Breaking News

சீனாவில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் தங்கள் உயிரைப் பற்றி கவலைப்படாமல் புதிதாக பிறந்த குழந்தைகளின் உயிரை காப்பாற்றிய செவிலியர்கள் வீடியோ

அட்மின் மீடியா
0

சீனாவில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் தங்கள் உயிரைப் பற்றி கவலைப்படாமல் புதிதாக பிறந்த குழந்தைகளின் உயிரை காப்பாற்றிய செவிலியர்கள் வீடியோ

சீனாவில் ஏற்ப்பட்ட நிலநடுக்கத்தில் மருத்துவமனை கட்டிடம் குலுங்கிய நிலையில் அங்கிருந்த செவிலியர்கள் தங்கள் உயிரை பற்றி கவலைபடாமல் புதிதாகப் பிறந்த குழந்தைகளைப் பாதுகாக்க தங்கள் உயிரைப் பணயம் வைத்து காப்பாற்றிய வீடியோ இணையத்தில் வைரல் ஆகின்றது

அந்த வீடியோவில்

கட்டடம் குலுங்குகின்றது ஒரு செவிலியர் ஒரு பச்சிளங்குழந்தையை தனது கைகளில் கெட்டியாக பிடித்துள்ளார். 

வேறு ஒரு செவிலியர் மூன்று குழந்தைகளையும் அவர்களின் படுக்கைகளுடன் சேர்த்து இறுக்கமாக பிடித்துள்ளார்.

ஒட்டுமொத்த கட்டடமும் குலுங்கி செவிலியர்கள் நிலைகொள்ள முடியாமல் தள்ளாடினாலும், குழந்தைகளை விடாமல் பத்திரமாக பற்றிக்கொண்டு இருப்பததை அந்த வீடியோவில் காணலாம்

தங்களது உயிரையே பணயம் வைத்த அந்த செவிலியர்களின் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகின்றது

வீடியோ பார்க்க இங்கு கிளிக் செய்யவும்:-

https://x.com/adminmedia1/status/1906532868471632381

Tags: வெளிநாட்டு செய்திகள் வைரல் வீடியோ

Give Us Your Feedback