அதிமுக பொதுச்செயலாளர் பொறுப்பிலிருந்து ஈபிஎஸ் விலக வேண்டும் - ஒ.பன்னீர் செல்வம்
அதிமுக பொதுச்செயலாளர் பொறுப்பிலிருந்து ஈபிஎஸ் விலக வேண்டும் - ஒ.பன்னீர் செல்வம்
அதிமுக பொதுச்செயலாளர் பொறுப்பிலிருந்து எடப்பாடி பழனிசாமி அவராகவே விலக வேண்டும் என முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி இன்று செய்தியாளர்களை சந்தித் போது அவரிடம் ஓபிஎஸ்-ஐ மீண்டும் அதிமுகவில் இணைக்க சாத்தியம் உள்ளதா என கேள்வி எழுப்பினர்.
இதற்கு பதிலளித்த எடப்பாடி பழனிசாமி, அ.தி.மு.க அலுவலகத்தின் மீது தாக்குதல் நடத்தியவர் ஓபிஎஸ். அவரை கட்சியில் இணைக்க முடியாது என திட்டவட்டமாக கூறினார்.
இந்த நிலையில், அதிமுக பொதுச்செயலாளர் பொறுப்பிலிருந்து எடப்பாடி பழனிசாமி அவராகவே விலக வேண்டும் என முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் கூறியதாவது: ஒற்றைத்தலைமை வந்தால் அனைத்து தேர்தலிலும் வெற்றி பெறுவேன் என்று எடப்பாடி பழனிசாமி கூறினார்.
ஆனால் ஒரு தேர்தலில்கூட வெற்றி பெறவில்லை. பொதுச்செயலாளர் பொறுப்பிலிருந்து எடப்பாடி பழனிசாமி அவராகவே விலக வேண்டும். இல்லாவிட்டால் அவமரியாதையை சந்திப்பார் என கூறினார்
Tags: அரசியல் செய்திகள்