Breaking News

தமிழகம் முழுவதும் மண்டல வக்பு வாரிய ஆய்வாளர்கள் அதிரடியாக இடமாற்றம் முழு விவரம்

அட்மின் மீடியா
0

கோவை, மதுரை, நெல்லை, திருச்சி உள்ளிட்ட எட்டு மண்டல வக்பு வாரிய ஆய்வாளர்கள் சென்னைக்கு அதிரடியாக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். 


இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பில், 

நெல்லை மண்டலத்திற்கான வக்பு வாரிய ஆய்வாளர் சையது வஜீத், சென்னை மண்டலத்தின் இளநிலை உதவியாளர் பொறுப்புக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். 

அதேபோல் சென்னை மண்டலத்தின் வக்பு வாரிய ஆய்வாளரான பீர் முகமது, இளநிலை உதவியாளர் பொறுப்புக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். 

திருச்சி, வேலூர், மதுரை, ராமநாதபுரம், கோவை, சேலம், கடலூர் மண்டலங்களைச் சேர்ந்த வக்பு வாரிய ஆய்வாளர்களும், சென்னை மண்டலத்தின் இளநிலை உதவியாளர் பொறுப்புக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

நிர்வாக காரணங்களுக்காக அதிகாரிகள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளதாக தமிழ்நாடு வக்பு வாரியம் விளக்கமளித்துள்ளது.

Tags: தமிழக செய்திகள் மார்க்க செய்தி

Give Us Your Feedback