Breaking News

ஓ.பி.எஸ்-ஐ கட்சியில் இணைக்க முடியாது - எடப்பாடி பழனிசாமி திட்டவட்டம்!

அட்மின் மீடியா
0

ஓ.பி.எஸ்-ஐ கட்சியில் இணைக்க முடியாது - எடப்பாடி பழனிசாமி திட்டவட்டம்!

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவரிடம் ஓபிஎஸ்-ஐ மீண்டும் அதிமுகவில் இணைக்க சாத்தியம் உள்ளதா என கேள்வி எழுப்பினர். இதற்கு பதிலளித்த எடப்பாடி பழனிசாமி, அ.தி.மு.க அலுவலகத்தின் மீது தாக்குதல் நடத்தியவர் ஓபிஎஸ். அவரை கட்சியில் இணைக்க முடியாது என கூறினார்.

இதேபோல் பாஜக கூட்டணி குறித்த கேள்விக்கு பதில் அளித்த எடப்பாடி பழனிசாமி, அண்ணாமலை டெல்லி பயணம் குறித்து அவரிடம் தான் கேட்க வேண்டும். தமிழக பிரச்சினை குறித்து அமித்ஷாவிடம் பேசினேன். தேர்தல் நெருக்கத்தில் கூட்டணி குறித்து பேச்சுவார்த்தை நடைபெறும் தேர்தல் நேரத்தில் ஒத்த கருத்துடைய கட்சிகளுடன் அ.தி.மு.க கூட்டணி அமைக்கும் என கூறினார்..

Tags: அரசியல் செய்திகள் தமிழக செய்திகள்

Give Us Your Feedback