புதிய ரேசன் கார்டு விண்ணப்பித்தவர்கள் கவனத்திற்க்கு தமிழக அமைச்சர் வெளியிட்ட அறிவிப்பு முழு விவரம்
புதிய ரேஷன் கார்டுக்கு விண்ணப்பித்து காத்திருப்பவர்களுக்கு தமிழ்நாடு அரசு நல்ல செய்தி ஒன்றை வழங்கியுள்ளது.
ஏற்கனவே விண்ணப்பித்த 2 லட்சத்து 24 ஆயிரம் பேருக்கும் புதிய ரேஷன் கார்டு கிடைக்கும் என தகவல் வெளியாகி உள்ளது.
லோக்சபா தேர்தல் காரணமாக நிறுத்திவைக்கப்பட்டிருந்த புதிய ரேஷன் ஸ்மார்ட் கார்டுகள் வழங்கும் பணி ஜூன் மாதம் முதல் தொடங்க உள்ளது.
தமிழகத்தில் மானிய விலையில் உணவு பொருட்கள் ரேஷன் கடைகளின் மூலம் வழங்கப்படுகிறது. அந்த வகையில் அரசின் திட்டங்களை பெறுவதற்கு ரேஷன் கார்டு முக்கிய தேவையாக உள்ளது. குறிப்பாக மகளிர் உரிமை தொகை, பொங்கல் பரிசு தொகுப்பு, இயற்கை சீற்றம் இழப்பீடு உள்ளிட்டவைகளுக்கு ரேஷன் கார்டு இருந்தால் மட்டுமே கிடைக்கும்.
நாடாளுமன்ற தேர்தல் காரணமாக நிறுத்திவைக்கப்பட்டிருந்த புதிய ரேஷன் ஸ்மார்ட் கார்டுகள் வழங்கும் பணி ஜூன் மாதம் முதல் தொடங்க உள்ளது. என அமைச்சர் சக்கரபாணி தெரிவித்துள்ளார்.
திமுக ஆட்சி அமைந்தவுடன் 18 லட்சத்து 9 ஆயிரத்து 607 புதிய குடும்ப அட்டைகள் வழங்கப்பட்டுள்ளதாகவும், இன்றைய தினம் புதிதாக 51ஆயிரத்து 327 குடும்ப அட்டைகளுக்கான விண்ணப்பங்கள் ஏற்க்கப்பட்டு ரேஷன் கார்டு அச்சடிக்கும் பணி தொடங்கியுள்ளதாகவும் அது பொதுமக்களுக்கு விரைவில் வழங்கப்படும் எனவும் கூறினார்.
Tags: தமிழக செய்திகள்