Breaking News

வக்ஃபு வாரிய மசோதாவுக்கு எதிராக தமிழக சட்டமன்றத்தில் தீர்மானம் கொண்டுவரும் முதல்வர் ஸ்டாலின்

அட்மின் மீடியா
0

வக்ஃபு வாரிய மசோதாவுக்கு எதிராக தமிழக சட்டமன்றத்தில் தீர்மானம் கொண்டுவரும் முதல்வர் ஸ்டாலின்.


இந்தியா முழுவதும் உள்ள வக்ஃபு சொத்துக்கள், வக்ஃபு சட்டம் 1995-ஆல் நிர்வகிக்கப்பட்டு வருகின்றது. இந்நிலையில் இந்தச் சட்டத்தில் திருத்தங்களை மேற்கொள்ள மத்திய பா.ஜ.க. அரசு கொண்டுவந்துள்ள வக்ஃபு சட்டத் திருத்த மசோதா 2024, வக்ஃபு சொத்துக்கள் மீதான இஸ்லாமியர்களின் உரிமையை பறிக்கும் வகையிலும், ஆக்கிரமிப்புக்கு துணை போகும் வகையிலும் உள்ளதாகவும், இதனால், இஸ்லாமியர்களின் வழிபாட்டுத் தலங்கள், அடக்க ஸ்தலங்கள் மீதான உரிமைகளும் பறிபோகும் வாய்ப்புள்ளதாக சிறுபான்மை இஸ்லாமிய சமூக மக்கள் அச்சம் தெரிவிக்கின்றனர்.

நாடாளுமன்றத்தில் அடுத்த வாரம் வக்ஃபு வாரிய சட்டத்திருத்த மசோதா தாக்கல் செய்யப்படவுள்ளது. இந்நிலையில் வக்ஃபு வாரிய திருத்த மசோதாவை கண்டித்து நாளை சட்டப்பேரவையில் தனித்தீர்மானம் நிறைவேற்றப்படுகிறது. மசோதாவை ஒன்றிய அரசு கைவிடக்கோரும் தீர்மானத்தை முன்மொழிகிறார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.

Tags: அரசியல் செய்திகள்

Give Us Your Feedback