கட்டாய மத மாற்றத்தில் ஈடுபட்டால் மரண தண்டனை - மத்தியப் பிரதேச முதல்வர் அறிவிப்பு
கட்டாய மத மாற்றத்தில் ஈடுபட்டால் மரண தண்டனை - மத்தியப் பிரதேச முதல்வர் அறிவிப்பு
சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு போபாலில் நடைபெற்ற ஒரு நிகழ்வில் பேசிய மத்தியப் பிரதேச முதல்வர் மோகன் யாதவ்,
லவ் ஜிஹாத் சம்பவங்களுக்கு எதிராக தீவிர நடவடிக்கைகளை அரசு எடுக்க உள்ளது. கட்டாய மதமாற்றத்தில் ஈடுபடுபவர்களுக்கு மரண தண்டனையை உறுதி செய்யும் சட்டத்தை எனது அரசு கொண்டு வரும். மாநிலத்தில் கட்டாய மதமாற்றம் அனுமதிக்கப்பட மாட்டாது.மத சுதந்திரச் சட்டத்தின் மூலம், கட்டாய மதமாற்றம் செய்பவர்களுக்கு மரண தண்டனை விதிக்கும் வகையில் அந்த சட்டம் திருத்தப்படும்" என்று கூறினார்.
முதலமைச்சர் மோகன் யாதவின் பேச்சு சர்ச்சையான நிலையில், அவரின் பேச்சுக்கு காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் ஆரிஃப் மசூத் விமர்சனம் செய்துள்ளார்.
இது குறித்து அவர், “ அம்பேத்கரின் அரசியலமைப்பு சட்டத்தை மாற்றப் போவதாக அவர் ஏற்றுக்கொள்ள வேண்டும் இல்லையென்றால் அதில் குறை இருப்பதாகக் கூற வேண்டும். ஏனென்றால் யாராவது தானாக முன்வந்து மதம் மாறினால் அது அரசியலமைப்புச் சட்ட உரிமை. மாநிலத்தை கடனில் தள்ளுவது, இளைஞர்களுக்கு எந்த வேலையும் வழங்காதது போன்ற பிரச்சினைகளிலிருந்து கவனத்தைத் திசை திருப்பவே இது போல பேசுகிறார்கள்” என்று கூறியுள்ளார்.
Tags: அரசியல் செய்திகள்