அமித்ஷாவை சந்தித்து பேசியது என்ன எடப்பாடி பழனிச்சாமி பேட்டி முழு விவரம்
அமித்ஷாவை சந்தித்து பேசியது என்ன எடப்பாடி பழனிச்சாமி பேட்டி முழு விவரம்
உள்துறை அமைச்சர் அமித்ஷாவை அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி டெல்லியில் உள்ள அவரது இல்லத்தில் நேரில் சந்தித்துப் பேசினார். மத்திய அமைச்சர் அமித்ஷாவை எடப்பாடி பழனிச்சாமி டெல்லியில் உள்ள அவரது இல்லத்தில் சந்தித்துள்ளார். அப்போது அவருடன் கே.பி.முனுசாமி, எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் ஆகிய முன்னாள் அதிமுக அமைச்சர்களும், அதிமுக மாநிலங்களவை எம்பி தம்பிதுரை ஆகியோரும் உடன் இருந்தனர்.
இருமொழிக் கொள்கை நிலைப்பாட்டை எடுத்துரைத்தோம், மேலும் தமிழ்நாட்டிற்கு எந்த பாதிப்பும் வராத வகையில் தொகுதி மறுசீரமைப்பு நடத்த வேண்டும் எனவும் அதேபோல் டாஸ்மாக் ஊழல் குறித்து முழுமையாக விசாரிக்க வேண்டும் என வலியுறுத்தினோம் என்று கூறிய அவர் மேலும் தமிழ்நாட்டின் சட்டம் ஒழுங்கு குறித்து உள்துறை அமைச்சர் அமித்ஷா விரிவாக கேட்டுக்கொண்டார் எனவும் கூட்டணி குறித்து பேசவில்லை, மக்களுடைய பிரச்சனைகள் குறித்து தான் பேசினோம் எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார்.
Tags: அரசியல் செய்திகள்