இப்தார் நிகழ்ச்சி! தவெக தலைவர் விஜய் மீது போலீசில் புகார் முழு விவரம்
இப்தார் நிகழ்ச்சி! தவெக தலைவர் விஜய் மீது போலீசில் புகார் முழு விவரம்
இப்தார் நிகழ்ச்சியில் இஸ்லாமியர்களை இழிவுப்படுத்தியதாக த.வெ.க. தலைவர் விஜய் மீது வழக்குப்பதிவு செய்யக்கோரி சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் தமிழ்நாடு சுன்னத் ஜமாஅத் சார்பில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
இப்தார் நிகழ்ச்சியில் இஸ்லாமியர்களை இழிவுப்படுத்தியதாக தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய் மீது வழக்குப்பதிவு செய்யக்கோரி தமிழ்நாடு சுன்னத் ஜமாஅத் என்ற இஸ்லாமிய அமைப்பு சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் தவெக தலைவர் விஜய் மீது பரபரப்பு புகார்.
சென்னை ராயப்பேட்டை ஒய்எம்சிஏ மைதானத்தில் கடந்த 07ம் தேதி தமிழக வெற்றிக் கழகத்தின் சார்பாக இப்தார் நோன்பு திறப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்வில் சுமார் 3000 பேர் கலந்து கொண்டனர்
அவர்களுக்கு நோன்பு கஞ்சி மற்றும் மட்டன் பிரியாணி தயார் செய்து வழஙப்பட்டது இந்த விழாவில் விஜயுடன் இமாம் முகமது மன்சூர் காசிம், தமிழ்நாடு முஸ்லீம் லீக் கட்சியின் தலைவர் முஸ்தபா, மற்றும் தமிழக வெற்றிக்கழக கட்சியின் முக்கிய பொறுப்பாளர்கள் கலந்துகொண்டனர்.
இந்நிலையில், இப்தார் நிகழ்ச்சியில் இஸ்லாமியர்களை இழிவுப்படுத்தியதாக தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய் மீது வழக்குப்பதிவு செய்யக்கோரி புகார் அளிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாடு சுன்னத் ஜமாஅத் சார்பில் சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. தமிழக வெற்றி கழகத்தின் சார்பில் நடந்த இப்தார் நிகழ்ச்சியில் இஸ்லாமியர்கள் அவமதிக்கப்பட்டுள்ளதாக சுன்னத் ஜமாஅத் அமைப்பு குற்றம் சாட்டியுள்ளது.
மேலும் இந்த நிகழ்ச்சிக்கு வந்த உண்மையாக நோன்பை கடைபிடித்தவர்கள் கலந்துகொள்ள அனுமதிக்கப்படவில்லை. அவர்கள் தாக்கப்பட்டனர். பவுன்சர்கள் மூலம் அடித்து, உதைத்து வெளியே தள்ளப்பட்டனர்.
இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்கு நடிகர் விஜய் 1½ மணி நேரத்திற்கு முன்பே வந்தது தவறாகும். நோன்பு திறக்கும் நேரத்திற்கு 10 நிமிடத்திற்கு முன்பாக அவர் வந்திருக்க வேண்டும். அவர் நடத்திய இப்தார் நிகழ்ச்சி, விதிமுறைகளுக்கு மாறாக நடந்ததால் உரிய சட்டப்பூர்வ நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Tags: அரசியல் செய்திகள்