Breaking News

அதிமுக - பாஜக கூட்டணி பேச்சுவார்த்தை நடைபெறுகின்றது அமித்ஷா அறிவிப்பு

அட்மின் மீடியா
0

அதிமுக - பாஜக கூட்டணி பேச்சுவார்த்தை நடைபெற்று வருகின்றது அமித்ஷா அறிவிப்பு

தென்னிந்தியாவில் மிகவும் முற்போக்கான மாநிலமாகக் கருதப்பட்ட தமிழ்நாடு, தற்போது திமுக அரசின் கொள்கையால் குழப்பத்திற்கு ஆளாகியுள்ளது. எனவே, வருகின்ற 2026 தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலில் தமிழ்நாட்டில் தேசிய ஜனநாயக கூட்டணி அமைக்கப்படும்.

தாய்மொழியில் கல்வி பயில்வதை ஊக்குவிக்கும் தேசிய கல்விக்கொள்கையையும், மருத்துவம், பொறியல் உள்ளிட்ட படிப்புகளை தமிழ்மொழியில் கற்பிப்பது குறித்தும் திமுகவிடம் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. ஆனால், அவர்கள் அதை தொடங்கவும் இல்லை.. புத்தகங்களை தமிழ்மொழியில் மொழிப்பெயர்ப்பு செய்ய தயாராகவும் இல்லை.

தொகுதி மறுசீரமைப்பு விஷயத்தில் யாருக்கும் எந்த அநீதியும் செய்யப்படாது என்று நான் உங்களுக்குச் சொல்ல முடியும் .அதற்கு, 0.0001 சதவீதம் கூட அநீதி நடக்க வாய்ப்பு இல்லை," என்று தெரிவித்தார்.

அதிமுகவுடனான கூட்டணி குறித்த பேச்சுவார்த்தை நடைப்பெற்று வருவதாகவும், ’சரியான நேரம் வரும்போது, அதை தெரியபடுத்துவோம்.’ என்று தெரிவித்துள்ளார்..

Tags: அரசியல் செய்திகள்

Give Us Your Feedback